dinamalar telegram
Advertisement

ஒட்டுகேட்பு விவகாரம்: தேசிய பாதுகாப்பு கூட்டத்தை கூட்டிய பிரான்ஸ் அதிபர்

Share
பாரிஸ்: பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் பிரான்ஸ் அதிபர் மற்றும் அமைச்சர்கள் கண்காணிக்கப்பட்டதாக செய்தி வெளியான நிலையில், அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இன்று தேசிய பாதுகாப்பு தொடர்பான அவசர கூட்டத்தை கூட்டியுள்ளார்.

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ., நிறுவனத்தின் தயாரிப்பு தான் பெகாசஸ் எனும் உளவு மென்பொருள். இதனை பயன்படுத்தி இந்தியா உட்பட பல நாட்டு தலைவர்கள், பத்திரிகையாளர்களை உளவு பார்த்ததாக கூறப்படுகிறது. இந்தியாவில் ராகுல், பிரசாந்த் கிஷோர், மத்திய அமைச்சர்கள் இருவர், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என பலரது அலைபேசிகளை ஒட்டுக்கேட்டதாக பட்டியல் வெளியானது.

இதே போல் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், அவருக்கு நெருக்கமானவரான முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரான்கோசிஸ் டீ ரூகி மற்றும் அமைச்சர்கள் பலரது அலைபேசிகளை ஒட்டுக்கேட்கும் முயற்சிகள் நடந்ததாக பல முன்னணி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ஹேக்கிங் முயற்சி மட்டும் நடந்ததா அல்லது ஹேக் செய்யப்பட்டதா என்பதை தடவியல் சோதனையில்லாததால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்தன.

இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இன்று அவசர அவசரமாக தேசிய பாதுகாப்பு கூட்டத்தை கூட்டியுள்ளார். பெகாசஸ் பிரச்னை மற்றும் இணைய பாதுகாப்பு பற்றி அதில் விவாதிக்க உள்ளதாக அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் அதிபர் மேக்ரான் இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டிருப்பதாக கூறினார்.

அதே சமயம் பெகாசஸ் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான என்.எஸ்.ஓ.,வின் தலைவர், அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஒரு இலக்கு அல்ல என்பதை உறுதியாகக் கூறலாம் என இஸ்ரேல் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

 • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

  ஆய்வு செஞ்சு அம்னெஸ்ட்டி நிறுவனத்துக்கும் அதை ஆதாரமே இல்லாமல் வெளியிட்ட பிரான்ஸ் இணைய செய்தி நிறுவனத்திற்கும் கூடிய விரைவில் பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் ஆப்பு வைக்கும் ...பிரான்ஸ் அரசின் நடவடிக்கைக்கு பயந்து அம்னெஸ்ட்டி நேற்றே தோராயமான மற்றும் உத்தேசமான பட்டியல் தான் என யூ டர்ன் போட்டு உள்ளது ...உண்மை வெகு விரைவில் வெளியில் வரும் ...அப்போது மீண்டும் இடது சாரி மற்றும் லிபரல்ஸ்களின் முகத்திரை கிழிக்கப்படும் ...எத்தனை முறை பிடிபட்டா கூட அவனுங்க திருந்தமாட்டானுங்க ...

 • Amal Anandan - chennai,இந்தியா

  நம்மாளு அமைதி காக்கிறார், இப்படி விஷயம் வெளியே வரும்னு தெரியாது போல.

  • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

   பால் பவுடர் பாதிரி பக்கம் தலை காட்டாமல் இங்க வந்து கம்பு சுற்றுவது ஏனோ ?

  • Amal Anandan - chennai,இந்தியா

   அதுக்குதான் உங்க கூட்டம் இருக்குதே. நீங்க இதையெல்லாம் கேட்க மாட்டீங்க இல்லையா, அதான்.

 • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  தேசவிரோதிகள், சமுருக விரோதிகள் இவைகளைத் தடுக்க ஏற்படுத்தப்பட்ட மென்பொருள் எப்படி பிரான்சு அதிபர், அவரது அமைச்சர்கள், ராகுல், பிரசாந்த் கிஷோர், மத்திய அமைச்சர்கள் இருவர், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என பலரது பெயரும் இதில் வந்தது ?

 • Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா

  நம்மவா இங்கே ஒண்ணுமே நடக்கல ன்னுட்டு மருத்ண்டு இருக்கா. நம்மவா எப்போதுமே உண்மை மட்டும் தானே சொல்லுவா? நம்மவா வாயை திறந்தாலே உண்மை தானே? தெரியாம கூட நம்மவா பொய் பேசமாட்டார்சொன்ன சொல்ல நம்மவா வார்த்தை பிசகம காப்பாத்துவா...இன்னும் ஒரு வாரத்தில் கருப்பு பணம் எல்லாம் வெள்ளை ஆகல ன்ன முச்சந்தியில் அவாளே நிற்கவைக்க சொன்ன உத்தமரல்லவா நம்மவா?

  • ஏகன் ஆதன் - கிண்ணிமங்கலம்,இந்தியா

   உண்மையை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாமல் , பிராமண தமிழில் அவர்களை நக்கல் பேசும் உங்களை திருத்த முடியாது . போலி வைக்கம் வீரரின் படைப்புகள் அப்படிதான் இருக்கும்

  • Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா

   நேக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் ... நேக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...ரஞ்சன் ககோய் மேலே குற்றம் சுமத்தின பெண்ணோட சொந்தக்காரா போன் எல்லாம் எதுக்கு வ்வொய் ஒட்டு கேட்டா? பாவம்...அதுக்கப்புறம் ரஞ்சன் ககோய் வெறும் ராஜ்ய சபை உறுப்பினர் பதவிக்கு ஒத்துண்டார்...இல்லேன்னா பெரிய மாநிலத்துக்கு கவர்னர் ஆகி இருக்கவேணும்...தீர்ப்பு கொடுத்தார்...அதுவும் எப்படி... விடுமுறை நாளெல்லாம் கூட கோர்ட்டுக்கு விசேஷமா வந்து விழுந்தடிச்ச்சு விசாரிச்சு எல்லா தீர்ப்பு கொடுத்தா.... ராமர் கோவில்... ஏன்னா. ரபேல் விமானம் ...ஏன்னா....கடமை உணர்ச்சி அவாளுக்கு நிறைய...

Advertisement