dinamalar telegram
Advertisement

சாலைகளின் தரம் உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு உறுதி

Share
Tamil News
மதுரை: ஊராட்சி, ஒன்றிய சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளின் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஊராட்சி, ஒன்றிய சாலைகளை தரம் உயர்த்த எம்எல்ஏ.,க்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து கலெக்டர்களிடம் அறிக்கை கேட்டு உள்ளோம். சாலை பணிகளில் நில எடுப்பின் காரணமாக பணிகள் கால தாமதம் ஏற்படுகிறது. நிலம் எடுக்க மட்டும் 5 மாவட்ட வருவாய் அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். ரயில்வே பாலம் கட்டுவதில் ஏற்படும் தாமதத்தை குறைக்க, ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்க உள்ளோம். சாலை ஓரங்களில் மரங்கள் நட முதல்வர் ஆணை பிறப்பித்து உள்ளார். அதனை விரைந்து செயல்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

பழனி - கொடைக்கானல் பாதையை தேசிய நெடுஞ்சாலையில் இணைத்து தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். கொடைக்கானல் - மூணாறு சாலையை கேரள அரசுடன் பேசி தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்போம். கீழடி அகழாய்வு இடத்திற்கு செல்லும் சாலையையும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள நகரங்கள், பேரூராட்சி அனைத்திலும் புறவழிச்சாலை தரமாக அமைக்கப்படும். மதுரை வண்டியூர் கண்மாயை சுற்றுலா தலமாக மாற்ற துறை சார்ந்த அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

கலைஞர் நூலகம் அமைக்க மதுரை - நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடம் பொருத்தமாக உள்ளது. அதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பணிகளை விரைவுபடுத்துவோம். நிதி நிலை அறிக்கை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். 5 ஆண்டு ஆட்சி முடிவதற்குள் நிதி நிலையை சீர் செய்வோம். குடும்ப பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது, அது கண்டிப்பாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • RajanRajan - kerala,இந்தியா

    ஏம்பா மன்னாதி மன்னா நீங்க ஒப்பந்ததாரர்களிடம் ஐம்பது சதவீதம் ஒப்பந்த மதிப்பீட்டில் லஞ்ச துட்டு கறக்காமல் இருந்தாலே போதுமே சாலை தரம் எப்படி வேணும்னு ஒப்பந்தத்தாரை கேள்வி கேக்கலாமே. இங்கே தான் முதலிலே தேனை நக்கிடுவானுங்க அவனுங்க கிட்டே அவன் என்ன பண்ணுவான் ரோடு போடுறேன்னு தார் பாய் விரிப்பானுங்க ஒரே மலையிலே ரோடு குண்டும் குழியுமா மக்களை பார்த்து சிரிக்க அவனவன் ரோடுலே மல்லாக்க வுழுந்து கிடைப்பானுங்க தனியார் மருத்துவமனைகள் வளம் கொழிக்கும். . .

  • m.viswanathan - chennai,இந்தியா

    இதெல்லாம் 5 முறை முதல்வர் என பெருமை பீற்றிக்கொள்ளும் காலத்தில் செய்ய தெரியவில்லையா , இன்னும் இந்த தமிழன் உங்களை நம்புறான் பாரு

  • RajanRajan - kerala,இந்தியா

    கொஞ்ச நாளா கூட்டாட்சி தத்துவம் ஒன்றிய அரசுன்னு ஆளாளுக்கு கூப்பாடு போட்டானுங்களே ஆவேசமா. இப்போ சத்தத்தையே காணோமே. எல்லாவனும் கொங்கு மண்டலம்னு ஓசை கேட்டு சுருங்கி பம்மிட்டானுங்களோ. அதுதான் அடிவயிற்றில் கை வச்சால் தானா குனிஞ்சுடுவானுங்களே.

Advertisement