dinamalar telegram
Advertisement

3 ஆண்டாக ஒரே ரேஷன் கடை? ஊழியரை மாற்ற உத்தரவு

Share
கோவை : 'தமிழகத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஒரே ரேஷன் கடையில் பணிபுரியும் பணியாளர்கள் வெவ்வேறு கடைகளுக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும்' என, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் பிறப்பித்துள்ள உத்தரவு:


சில ரேஷன்கடைகளில் விற்பனையாளர்கள்,அளவையர், கட்டுனர்களை தவிர, வெளிநபர்கள் கடைகளில் இருப்பதால், மிகுந்த தொல்லை ஏற்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன. பணியாளர்கள் தவிர யாரும் கடைகளில் இருக்கக்கூடாது.ஆய்வு மற்றும் இருப்பு நிலை குறித்து தெரிந்து கொள்ள செல்லும் குடிமையியல் மற்றும் வழங்கல் துறை பணியாளர்கள் ஆய்வுகளை நிறைவு செய்து, விரைவாக வெளியேற வேண்டும்.


வெளிநபர்களை ரேஷன் கடையில் அனுமதித்து, அவர்களுக்கு துணை போகும் விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வெளிநபர்கள் கடையினுள் இருந்தால், அதற்கு ரேஷன் கடைக்காரரே பொறுப்பு.தொடர்ந்து, மூன்று ஆண்டுகளாக ஒரே ரேஷன் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களை, வெவ்வேறு ரேஷன் கடை களுக்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement