dinamalar telegram
Advertisement

சி.எஸ்.ஐ., கூட்டத்தில் மோதல் : மேலும் ஒருவர் கைது

Share
கோவை : கோவை சி.எஸ்.ஐ., திருமண்டல கூட்டத்தில் நடந்த மோதல் தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்தனர்.


@கோவை, ரேஸ்கோர்ஸ் பிஷப் அப்பாசாமி கல்லுாரியில் சி.எஸ்.ஐ., நிர்வாக குழு கூட்டம், கடந்த, 19ம் தேதி நடந்தது. இக்கூட்டத்தில் திடீரென இரு தரப்புக்கு இடையே மோதல் வெடித்து, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.இதில் வக்கீல் நேச மெர்லின், 36 என்பவரின் தலையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.போதகர் சார்லஸ் சாம்ராஜ், ஆலய போதகர் வில்சன் குமார்,48 உள்பட, 15 பேர் மீது கொலை மிரட்டல் உள்பட, ஏழு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.


சி.எஸ்.ஐ., ஆலய செயலாளர் ஜேக்கப், 73 அளித்த புகாரின்படி, நேச மெர்லின் உட்பட இருவர் மீது, நான்கு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.வக்கீலை தாக்கிய வழக்கில் தொடர்புடைய வில்சன்குமாரை ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடுகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement