dinamalar telegram
Advertisement

ஸ்பெயினில் பார்லிமென்ட் நடவடிக்கை பாதிப்பு: காரணம்.. எதிர்க்கட்சிகள் இல்லை எலி!

Share
சிவியல்: ஸ்பெயினில் உள்ள தன்னாட்சி பிரேதசமான அண்டலூசியாவில் பார்லிமென்டில் உறுப்பினர்கள் முக்கியமான பிரச்னைக்காக ஓட்டுப்போட வாக்களிக்க இருந்த போது எலி ஒன்று நுழைந்ததால் பலர் பதறியடித்து இருக்கையை விட்டு ஓடினர்.

இந்தியாவில் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம், கோவிட் இரண்டாம் அலை, தடுப்பூசி தட்டுப்பாடு ஆகிய பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுகின்றன. இதனால் அவை நடவடிக்கை ஒத்தி வைக்கப்படுகிறது. இன்றும் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.

இதே போல் ஸ்பெயினில் உள்ள தன்னாட்சி பிரேதசமான அண்டலூசியாவில் பார்லிமென்ட் நடவடிக்கை பாதிக்கப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்க்கட்சிகள் காரணமில்லை. அவைக்கு நடுவே சுற்றி வந்த எலி தான் காரணம்.

புதனன்று அண்டலூசியா பார்லிமென்ட் அவை நடவடிக்கை வழக்கம் போல தொடங்கியது. அப்பிராந்தியத்தின் முன்னாள் அதிபர் சூசனா டயஸ் என்பவரை செனட்டராக நியமிப்பது தொடர்பான வாக்கெடுப்புக்கு தயாராகினர்.
சபாநாயகர் மர்தா போஸ்கட் பேசிக்கொண்டிருந்த போது அவைக்குள் எலி இருப்பதை கண்டு அதிர்ச்சியாகி மைக்கிலேயே கத்தியபடி வாயடைத்துப் போனார். அதனைக் கண்டு சிலர் தங்கள் இருக்கைகளிலிருந்து எழுந்து வெளியே ஓடினர். ஒரு வழியாக பணியாட்கள் எலியை பிடித்துச் சென்று அப்புறப்படுத்தினர். அதன் பின் அவை நடவடிக்கை தொடங்கியது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

  • JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா

    எதிர்கட்சிகளை எலிகளோடு ஒப்பிட்டது அருமை.

  • Jai -

    காங்கிரசால் வேறு எந்த யுக்தியைம் கண்டுபிடிக்க முடியாது என்றால் அவர்கள் எலியையும் விடுவார்கள்

  • அப்புசாமி -

    இதுக்கு முன்னாடி எலி ஓடி பார்த்ததில்லையா? இப்பிடி பதறுறாங்க.

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    தமிழ் நாட்டில் அணில் மின்சார ஒயரை கடித்து மின்துண்டிப்பு செய்கிறது, குரங்கு டாஸ்மாக் கடையில் நுழைந்து சரக்குகளை குடிக்கிறது என்றால், பாவம் ஸ்பெயினில் எலி ஒன்று நுழைந்து பார்லிமென்ட் நடவடிக்கைகளை தடை செய்கிறது. இது என்னடா மனிதர்களுக்கு இந்த விலங்கினங்களினால் வந்த சோதனை...???

  • தமிழ் குடிமகன் -

    எங்களுக்கு எலிகளை கண்டு பயமில்லை...ஏனென்றால் அதைவிட பெரிய ஊழல் பெருச்சாளிகள் !!!

Advertisement