dinamalar telegram
Advertisement

முதலீடுகளை ஈர்க்க புதிய கொள்கை திட்டம் : தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தகவல்

Share
Tamil News


கோவை : ''அதிக முதலீடுகளை ஈர்க்க, புதிய கொள்கை திட்டம் வகுக்கப்பட உள்ளது,'' என, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.





கோவை விளாங்குறிச்சி 'டைடல் பார்க்' வளாகத்தில், தகவல் தொழில்நுட்ப நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடந்தது. அப்பகுதியில், 114.16 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும், தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பின், அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:


தமிழகத்தை பொறுத்தவரை, ஆண்டு தோறும், 4.5 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பு முடித்து வெளிவருகின்றனர். தகவல் தொழில்நுட்ப துறையில், 1.5 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளிக்கும் நிலை உள்ளது. மற்றவர்கள், வேலைதேடி பிற மாநிலங்கள், நாடுகளுக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்த்து, தமிழகத்திலேயே அதிக வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


தென்மாவட்டங்களில் வேலைவாய்ப்பு குறைவாக உள்ளதால், அங்கு படித்த இளைஞர்கள் சென்னை வரும் நிலை உள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கி வேலைவாய்ப்பு அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாட்டு முதலீடுகள், அண்டை மாநிலங்களுக்கு சென்றுவிட்டன. தமிழகத்தில் முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் வகையில் புதிய கொள்கை திட்டம் வகுக்கப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.


தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலர் நீரஜ் மிட்டல், 'எல்காட்' மேலாண்மை இயக்குனர் அஜய் யாதவ், கலெக்டர் சமீரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement