dinamalar telegram
Advertisement

இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை அறிவிக்காதது ஏமாற்றம்: கமல்

Share
சென்னை: திமுக ஆட்சியில் அமர்ந்து 75 நாட்கள் ஆகியும் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வரவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நமது பொருளியலில் இல்லத்தரசிகளின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களின் தியாகமும், உழைப்பும், அர்ப்பணிப்பும் அளவீடற்றவை. அதற்குரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை, இல்லத்தரசிகளுக்கு ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை முதன் முதலில் முன்வைத்த அரசியல் கட்சி மக்கள் நீதி மய்யம். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற மக்கள் நீதி மய்யத்தின் முன்னெடுப்பு பெண்களுக்கு மிகப்பெரிய பொருளாதார சுதந்திரத்தை அளிக்கக் கூடியது.
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற மக்கள் நீதி மய்யத்தின் திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பினை பார்த்து பிற அரசியல் கட்சிகளும் இதை தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் சேர்ந்துக்கொண்டன. தமிழகத்தில் துவங்கி அசாம் தேர்தல் வரை இது எதிரொலித்தது. திமுக தேர்தல் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தது. இத்திட்டம் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பது பற்றிய அறிவிப்புகள் கவர்னர் உரையில் இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆட்சியில் அமர்ந்து 75 நாட்களாகியும் இந்த அறிவிப்பு வரவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.
சமூகநலத்திட்டங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழும் தமிழகம், குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விஷயத்தில் சுணக்கம் காட்டுவது ஏற்புடையதல்ல. திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட இந்த திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். அதற்கான அறிவிப்புகளை நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (30)

 • Nagarajan D - Coimbatore,இந்தியா

  எனக்கு கூட நீ உன் அடைத்த மனைவி /துணைவி பற்றி அறிவிக்காதது ஏமாற்றமாக உள்ளது....

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  திமுக வைக்கண்டு பொது மக்கள் அஞ்சுவதே அவர்களின் வெற்றிக்கு காரணம் .எடுத்து சொல்லுங்க கமல் .ஏய்ச்சு பிழைக்கும் தொ ளிலே சரிதானா எண்ணிப்பாருங்க -அன்றே எம்ஜிஈயார் பாடிட்டாரே மூன்று படி அரிசி திராவிட நாடு நீட் தேர்வு ரத்து மது கடைகளை மூடுதல் .திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகளை மூடுதல் இன்னும் எவ்வளவு கூறி விட்டு வழுக்கி விழுந்த அவர்களை இன்னும் மக்கள் 'கண்டுக்கவே இல்லியே ?ஏனென்றால் பயம் ,பயம் ,பயம்

 • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

  எந்த கட்சியும், அதைத்தருகிறேன், இதைத்தருகிறேன் என்று தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கும் முன்பு, அதை எப்படி நிறைவேற்றப்போகிறோம், எங்கிருந்து பணம் வரும், நிறைவேற்றாவிட்டால் என்ன செய்வோம் என்று தேர்தல் நிர்வாகத்திற்கு ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று சட்டம் இருக்க வேண்டும். அதை தேர்தல் ஆணையம் பரிசீலித்து ஒப்புக்கொண்ட பிறகே மக்களுக்கு வெளியிட வேண்டும். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் பெரிய அபராதம் அந்த கட்சிக்கு விதிக்கப்பட வேண்டும். அடுத்த தேர்தலில் நிற்க தகுதி கிடைக்காதவாறு செய்ய வேண்டும்.

 • Vijay - Chennai,இந்தியா

  Promised to close Tasmac Promised to reduce petrol price by 5 rupees Promised to give 1 crore to Front Line workers who die due to Corona Promised to give 1000 rupees to housewives Promised to retain Lahshvatheev Island Promised to cancel Education loans Promised to cancel Farmer Loans Promised to cancel Jewel Loans Promised to cancel NEET Now they are saying "Did we give the date?" For electricity, they are blaming Anil For Corona, they are blaming EPS Changed the context Mattiya Arasu to Ondriya Arasu, but oppose KONGU NADU. Removed the word Jaihind from Assembly. The meaning of Jaihind is Long Live India. Hindu Temple land patta are given for free to Christians and Muslims. Hindu schools are targetted to satisfy missionary schools Freedom of speech is curtailed and those who speak against the government are arrested. Corona death and count is faked Blaming everything for Central Government Banks are not giving cool drinks to customers No money in treasury but sping 2500 crores for park An eye wash NEET committee Hindu Temples are demolished Land Mafia has started its job Sand Mafia at its peak This government has become "B" team of Pakistan and China, and curse to our nation.

 • Ram - ottawa,கனடா

  thi mu ka enbathe oru ematrumthan

Advertisement