dinamalar telegram
Advertisement

சவுதி இளவரசரின் சீர்திருத்த முயற்சி: மெக்கா, மெதினா பாதுகாப்பு பணியில் பெண்கள்

Share
ரியாத்: 'பழமை வாதத்திலிருந்து விடுபடுவதன் மூலம் சர்வதேச முதலீட்டை ஈர்க்கலாம்' எனக் கருதும் சவுதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான், தன் நாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களை 'விஷன் 2030' என்ற பெயரில் செய்து வருகிறார்.

அதன்படி, பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்களின் பாதுகாவலர்கள் அனுமதியில்லாமல் பயணம் செய்ய அனுமதி, சொத்துரிமையில் கூடுதல் கட்டுப்பாடு, ராணுவத்தில் பெண் படை போன்றவற்றை அறிவித்தார். அந்த வரிசையில் தற்போது மெக்கா, மெதினா புனிதத் தலங்களின் பாதுகாப்புப் பணியில் பெண் வீராங்கனைகளைப் பணியமர்த்தும் திட்டத்தையும் செயல்படுத்தி உள்ளார்.

'நாங்கள் இன்று மிகவும் புனிதமான மெக்கா பெரு மசூதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோம். புனித யாத்திரிகர்களுக்கு சேவை செய்வது மாண்புமிகு பணி. மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறோம்' என, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் தெரிவித்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

  • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

    வஹாபிஸம் ஒழிந்தால் மனித நேயம் வளரும் .........

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    ஆபத்தான விளையாட்டு. இவர்களின் பாதுகாப்புக்கு யார் உத்திரவாதம் கொடுப்பதாம்?

  • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    பழமை வாதத்திலிருந்து சவூதி வெளியில் வர ஆரம்பித்து விட்டது ஆனா இங்கே மதம் மாறிய குரூப் உண்ணும் பெண்களை பர்தா போட்டு தான் சுற்ற வேண்டும் என்றும் / மற்ற கட்சிகள் மீட்டிங் எல்லாம் போக கூடாது என்றும் போனால் பாட்வா கொடுத்து கொண்டு இருக்கிறார்கள் ????

  • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

    பெரும் மகிழ்ச்சி ...ஆண்டவரின் சந்தோஷத்துக்கு உள்ளாவீர் ...வீர வணக்கம் .உங்களின் உறுதிக்கு

  • பச்சையப்பன் கோபால் புரம். -

    எனக்கென்னவோ இந்த யூதர்கள் சவூதி இளவரசருக்கு சூனியம் வைத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.இப்படியே போய்க் கொண்டிருந்தால் யூதர்கள் கொட்டத்தை அடக்க அடக்க முடியாது போலிருக்கிறது.

    • Raja - Coimbatore

      தூக்கத்தில் கூட யூதர்கள் உங்களை மிரட்டுகிறார்கள் போல. ஆனால் ஒன்றும் செய்ய முடியாது.

    மேலும் செய்திகள் :

Advertisement