dinamalar telegram
Advertisement

போராட்ட களத்தை மாற்றிய விவசாயிகள்: ஜந்தர் மந்தரில் தீவிர பாதுகாப்பு

Share
புதுடில்லி: டில்லி சிங்குர் எல்லையில் இருந்து ஜந்தர் மந்தருக்கு தங்களது போராட்டக் களத்தை விவசாயிகள் மாற்றியுள்ளனர்.


மத்திய அரசின் புதிய வேளாண் சட்ட திருத்தங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டில்லியில் கடந்த பல மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவிட் பெருந்தொற்றால், போராட்டம் சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது இயல்பு நிலை திரும்புவுதால் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

டில்லியில் நாடாளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த அவர்கள் அனுமதி கோரினர். ஆனால், 'கோவிட் பரவல் ஏற்படும்' எனக் கூறி போலீசார் மறுத்தனர். இதையடுத்து டில்லி சிங்குர் எல்லையில் இருந்து டில்லி ஜந்தர் மந்தருக்கு போராட்டக் களத்தை விவசாயிகள் மாற்றியுள்ளனர். அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேருந்துகளில் ஜந்தர் மந்தர் வந்து சேர்ந்தனர். பிகேஎஸ் விவசாய சங்கத் தலைவர் திகைத் தலைமையில் ஜந்தர் மந்தரில் அவர்கள் தங்கள் போராட்டத்தை தொடங்கினர். அங்கு போலீசார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

  • M Ramachandran - Chennai,இந்தியா

    விவசாயிகள் என்று போராட்ட காரர்கள் என்று போடாதீர்கள்..முன்பு காமராஜர் அவர்கள் திருடர்களை ராஜ என்ற விகுதியை சேரத்து எழுதாதீர்கள் என்று ஊடகங்களுக்கு திருடன் என்று எழுதுங்கள் என்றார்.விவசாயிகள் என்ற போர்வய்க்குள் அதற்குள் ஒளிந்திருக்கும் தேச விரோதி சக்திகள் என்று போடுங்கள். இது தான் அவர்கள் கடேயஸீ மூச்சு.பெரு மூச்சு.

    • Priyan Vadanad - Madurai,இந்தியா

      "விவசாயிகள் என்ற போர்வய்க்குள் அதற்குள் ஒளிந்திருக்கும் தேச விரோதி சக்திகள்" தேசதுரோகம் என்கிற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் மனித நலவாழ்வு, வளவாழ்வின் எதிரிகளை என்ன சொல்ல?

  • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

    எத்தனை நாளைக்கு டில்லியிலேயே " விவசாயம் " பண்ணுவீங்க

  • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

    அடேயப்பா ...இன்னும் இருநூறு பேருங்க போராட்டத்துல இருக்காங்களா ?

  • ராஜா, பெங்களூர் - ,

    சென்னையில் சில நடிகர்கள் (சிவகுமார் மகன் கார்த்திக் போல) தங்களை விவசாயிகள் போல காட்டி நடிக்கின்றனர். டில்லியில் சில வியாபாரிகள் தங்களை விவசாயிகள் போல காட்டி நடிக்கின்றனர். இப்படி பலரும் நடித்து வருவதால் உண்மை விவசாயி தவித்து வருகின்றான்.

  • N.K - Hamburg,ஜெர்மனி

    இந்த போராட்டப்பணியில் சேர நேர்முகத்தேர்வு எதுவும் உள்ளதா. சம்பளம் எப்படி மாதம்தோறுமா? வாரம்தோறுமா?

Advertisement