dinamalar telegram
Advertisement

எதிர்க்கட்சிகள் அமளி: பார்லி.,ஒத்திவைப்பு

Share
புதுடில்லி: விவசாயிகள் பிரச்னை மற்றும் மொபைல்போன் ஓட்டு கேட்பு பிரச்னை காரணமாக பார்லிமென்டின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், பணிகள் முடங்கின.

இஸ்ரேலை சேர்ந்த, 'பெகாசஸ்' நிறுவனத்தின் உளவு மென்பொருள் வாயிலாக, நம் நாட்டைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரின் மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.இந்த விவகாரத்தை கண்டித்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், பார்லி., மழைக்கால கூட்டத்தொடரின் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

இன்றும், பார்லிமென்ட் இரு அவைகளும் துவங்கிய நிலையில், மொபைல் போன் ஒட்டுக்கேட்பு மற்றும் விவசாயிகள் பிரச்னையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய போது, அமளி தொடர்ந்ததால் பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பிற்பகலில்லோக்சபா கூடிய போது, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

ராஜ்யசபா துவங்கியதும், மொபைல்போன் ஒட்டுக்கேட்பு குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்து உரையை துவங்கிய போது எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. இதனால், ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (11)

 • Jai -

  காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது வெளிவந்த கனிமொழி ஆடியோ ராஜாத்தியம்மாள் ஆடியோ சண்முகநாதன் ஆடியோ இதெல்லாம் எப்படி வெளியே வந்தது?

 • A P - chennai,இந்தியா

  காங்கிரஸ் கட்சி நாட்டுப் ப்ரச்சனைகளுக்குத் தீர்வு காண விழைவதாகத் தெரியவில்லை. ரவுடித்தனம் செய்வதே வேலை. தேஸத் துரோகிகள். பார்லிமெண்ட்டில் இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டு விடை பெறுவதே நியாயம். அதை விடுத்து, பிற நாட்டுக் கைகூலிகளோ என்று எண்ணத் தோன்றும் வகையில் சபை நடக்க விடாமல் செய்வது அட்டூழியம் தவிர வேறொன்றுமில்லை. கயவாளிகள். அமளி செய்யும் இந்தத் தேசத் துரோகிகள் கடைசி காலத்தில், நன்கு புழுத்தபின் தான் கஷ்ட்டப்பட்டு சாவார்கள். நன் மக்கள் சாபம் சும்மா விடாது.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  பிஜேபிஅப்போது இதுபோன்ற அமளியி ல் ஈடுபட்டு ஆளும் கட்சியை பேச விடாம ல் பார்லியமென்ட்டை முடக்கியது.இப்பொது காங்கிரசும்,எதிர்க்கட்சிகளும் அதையே செய்கிறார்கள்.இவர்கள் மக்களின் Hard earned வரி பணத்தை விழலுக்கு இறைத்த நீ ர் போல் விரயம் செய்வது மிகவும் மன வருத்தத்தையும்,வலி யையும் தருகிறது.

 • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

  எதிர் கட்சிகள் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது நாட்டுக்கு நல்லது இல்லை. சபையை முடக்குவது சரியில்லை. மோடியின் வெற்றியை பார்த்து பொறாமை கொண்டு செயல் படுவது கொஞ்சம் கூட சரியில்லை. மோடி இல்லையெனில் இந்தியாவிற்கு வேறு ஒரு நல்ல தலைவர் தற்போது இல்லை. மோடி தப்பு செய்கிறாரா என்றால் ஆம் என்றுதான் சொல்வோம் அனால் மோடியை மாதிரி இன்னொரு தன்னலம் இல்லாத தலைவர் இல்லை. காங்கிரஸும் ராகுல் காந்தியும் ஒன்றுக்கும் உதவாதவர்கள் மோடி இல்லையெனில் இந்தியா சுதந்திரம் வாங்கி பிரயோஜனம் இல்லை என்று ஆகிவிடும்.

 • sankaseshan - mumbai,இந்தியா

  Are these elected fellows go to parliament for doing discussion or make problems ?

Advertisement