dinamalar telegram
Advertisement

100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் சம்பளம் உயர்த்த ஆலோசனை: அமைச்சர் பெரியகருப்பன்

Share
சென்னை: ‛‛தமிழக கிராமப்புறங்களில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்த அரசு ஆலோசித்து வருகிறது,'' என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அல்லது 100 நாள் வேலைத் திட்டம் என்பது, நாட்டின் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்கும் உத்தரவாதத்தை வழங்குகிறது. தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவோர் எண்ணிக்கை கடந்த 2017-18ல் 58.69 லட்சமாக இருந்தது. எனினும் 2018-19ல் 70.71 லட்சமாக அதிகரித்தது. பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. ஆகிய அரசின் நடவடிக்கைகளுக்குப் பின்னர் இளம் வயதினர் இவ்வேலைக்கு வருவது தற்போது அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது
கொரோனா 2-வது அலை கட்டுக்குள் இருப்பதால் கிராமப்புறங்களில் இத்திட்டத்தில் இணைந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும் 100 நாள் வேலைதிட்டத்தில் பணிபுரிபவர்கள் ஒழுங்காக பணிபுரிவதில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக நிலவி வருகிறது.

இதுகுறித்து தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள கிராமங்களில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் பகுதி நலனுக்காக மனசாட்சியுடன் பணிபுரிய வேண்டும். இவர்களுக்கு தற்போது வழங்கப்படும் கூலி ரூ.273லிருந்து ரூ.300 ஆக உயர்த்த அரசு ஆலோசித்து வருகிறது. ஆகவே, இதை பயன்படுத்திக் கொண்டு பணியாளர்கள் கிராமப்புறங்களில் சிறப்பாக பணிபுரிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (22)

  • Devaraju -

    Unwanted system pls stop thisLater all become very lazy

  • G.Kirubakaran - Doha,கத்தார்

    நூறு நாள் வேலை திட்டத்தில் , தூர் வரும்போது மேலாக புல்லை மட்டும் வெட்டி விட்டு, மூன்று அடி தூர் வாரியதாக சொல்கிறார்கள். வேலை நேரம் 2 மணி அளவு மட்டுமே . மக்களை சோம்பல் ஆகும் திட்டம்

  • Mohan - Thanjavur ,இந்தியா

    வெட்டியாய் ஒரு வேலை. போட்டோல பாருங்க எல்லாம் சும்மாடு வெச்சுக்கிட்டு சும்மாவே இருக்கு.

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    மக்களையும் பங்குதாரர்கள் ஆக்கிய அக்மார்க் ஊழல் திட்டம். அதனால்தான் பாஜகவும் நிறுத்த மனமில்லாமல் தொடர்கிறது. நாம் பெட்ரோல், டீசல் நிறைய வாங்கி ஊழல் திட்டங்களை வாழ வைப்போம். ஹமாரா பாரத் மஹான்.

  • RajanRajan - kerala,இந்தியா

    இந்த திட்டமே ஒரு ஒட்டு வாங்கி அரசியல் டாஸ்மாக் வித்தை. இதனாலே மொத்த விவசாயமும் பாதிக்க பட்டு அல்லாடிக்கிட்டு இருக்கு. இந்த கொள்ளையில் சம்பளத்தை வேற ஏத்தி கூத்தடிக்க போவுறானுங்களாக்கும். ஹூம் எவனுமே உருப்படியா சிந்திச்சு பழக்கமே இல்லை போலிருக்குது. ஒருநாள் சம்பளத்தை ரூபாய் 700 போட்டு கொடுங்கப்பா. அண்ணா நாமம் செழிக்க. ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஹிந்த்.

Advertisement