ஜீன்ஸ் அணிந்ததற்காக சிறுமியை அடித்து கொன்ற உறவினர்கள்: உ.பி.,யில் அதிர்ச்சி சம்பவம்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அமர்நாத் பஸ்வான். இவருக்கு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வேலை கிடைத்தது. இதையடுத்து அவர் தனது மனைவி, 17 வயது மகளுடன் அங்கு சென்றார்.
லூதியானாவில் சிறிது நாட்கள் தங்கியிருந்த அமர்நாத் பஸ்வானின் மனைவி மற்றும் மகள் சொந்த கிராமத்துக்கு திரும்பினர். அப்போது சிறுமி ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். இதற்கு அவரது தாத்தா, உறவினர் அரவிந்த் அவரது மனைவி, சகோதரர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

'ஜீன்ஸ் பேண்டை அணியக் கூடாது. இந்திய உடைகளைதான் அணிய வேண்டும்' என, கூறினார்கள். அதற்கு சிறுமி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சிறுமியை சுவற்றில் மோதியும், பலமாக தாக்கியும் கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை ஆட்டோவில் தூக்கி சென்று அங்குள்ள மேம்பாலத்துக்கு கீழே வீசியுள்ளனர்.

போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி சிறுமியை கொன்ற அவரது தாத்தாவையும், உடலை ஏற்றிச்சென்ற ஆட்டோ டிரைவரையும் கைது செய்துள்ளனர். சிறுமியை கொலை செய்த மற்ற உறவினர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
வாசகர் கருத்து (15)
அடித்து கொன்றவங்க என்னமோ உத்தமர்களோ?
மூடர் கூடம்.(கூட்டம்)
ஆத்திரக்காரனுக்கு புத்தியே இல்லை. கொடுமை. இவர்களை விசாரணையே இல்லாமல் என்கவுண்டரில் போடவேண்டும்
இந்த கொடுஞ் செயலைக் கண்டித்து கேரளா கவர்னரை போல உத்தர பிரதேச கவர்னர் உண்ணா (அரசியல் வாதிகள் ஸ்டைல் ) விரதம் இருப்பாரா .
அமர்நாத் பஸ்வான்.பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வேலை கிடைத்தது. இதையடுத்து அவர் தனது மனைவி, 17 வயது மகளுடன் அங்கு சென்றார்.முன்னேறிய வெளி உலகை கண்டு சற்றே முன்னேற்றம் கண்டார்கள் சனாதன சம்ப்ரதாயங்களில் ஊரிக் கிடக்கும் உத்தர பிரதேசத்தில் தாழ்த்தப் பட்டவர்கள் நிலை உயரவில்லையென்பது தெளிவாக தெரிகிறது அவர்களை முன்னேற செய்ய அங்கு ஆட்சியாளர்கள் தயாரில்லை அங்குள்ள தலைவர்களே பிற்போக்கு வாதிகளாக இருந்தால் இப்படித்தான் இருண்ட கண்டமாகவே உழல வேண்டியதுதான்