dinamalar telegram
Advertisement

ஒட்டுக்கேட்பு: கவர்னர் மாளிகை நோக்கி காங்., பேரணி

Share
சென்னை: பெகாசஸ் மென்பொருள் மூலம், மொபைல்போன் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்தும், விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியும் தமிழக காங்கிரசார் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர்.

இஸ்ரேலைச் சேர்ந்த பெகாசஸ் நிறுவனத்தின் உளவு மென்பொருள் வாயிலாக நம் நாட்டைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரின் மொபைல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ் பிரஹலாத் படேல் காங். முன்னாள் தலைவர் ராகுல் உள்ளிட்ட பிரமுகர்களின் பெயர்கள் அந்தப் பட்டியலில் உள்ளன.
இந்த விவகாரம் வெளியானதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ், உச்சநீதிமன்றம் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் கவர்னர் மாளிகை முன் அடையாள போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.

இதன்படி, சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கிண்டியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பேரணியாக சென்றனர். சட்டசபை காங்., தலை வர் செல்வபெருந்தகை , எம்எல்ஏ.,க்கள் பிரின்ஸ், ராஜேஸ்குமார், துரை சந்திரசேகர், ஹசன் மவுலாலானா , மாவட்ட தலைவர்கள் முத்தழகன், சிவராஜசேகரன், நாஞ்சில்பிரசாத், டில்லிபாபு, அடையாறு துரை, மாநில பொதுசெயலர்கள் காண்டீபன், வசந்தராஜ், வாழப்பாடி மகன் ராமசுகந்தன், கொட்டிவாக்கம் முருகன், கக்கன் உள்பட ஏரராளமானவர்கள் பங்கேற்றனர். பேரணியாக சென்ற போது, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். கவர்னர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

புதுச்சேரியில் காமராஜர் சிலையில் இருந்து பேரணியாக சென்று கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டனர்.
பெங்களூருவில் சித்தராமையா உள்ளிட்டோர் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர்.
அதேபோல், அனைத்து மாநிலங்களிலும், காங்கிரசார் பேரணியாக சென்று கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

 • Sathyanarayanan Sathyasekaren -

  Please don’t repeat the same comment

 • ராஜா -

  சரி என்னென்ன விஷயங்களை ஒட்டுக்கேட்டார்கள் என்று எல்லோருக்கும் சொல்ல முடியுமா? காங்கிரஸ்காரர்கள் தான் அப்பழுக்கற்ற உத்தமர்கள் ஆயிற்றே!

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  நேற்று NSO group அம்னெஸ்டி sue பண்ண போகிறோம் என்று அறிக்கை விட்டார்கள் ஆகவே அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தற்பொழுது ஒரு கிளாரிஃபிகேஷன் செய்தி விட்டு உள்ளார்கள் அதாவது அவர்கள் சொன்ன லிஸ்ட் பூரா பெகாசஸ் நிறுவனத்தின் உளவு பார்த்தது கிடையாது என்றும் ... மேலும் அந்த லிஸ்டில் இருப்பது எல்லாம் வெறும் ஒட்டு கேட்க பட்டு இருக்கலாம் என்ற potential target list என்று ??? சோ எந்த ஒரு ஆதாரம் இல்லாமல் வெறும் அனுமானத்தில் எல்லா நாட்டிலும் முக்கிய புள்ளிகள் ஒட்டு கேட்க பட்டு இருக்கலாம் என்று ஒரு புரளியை கிளப்பி விட்டு இருக்கானுங்க இந்த அம்னெஸ்டி குரூப் ????

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  கொரானாவை வரவேற்கும் கூட்டம் போன வாரம் அண்ணாமலைக்கு வரவேற்பு அப்படியே கூரான வுக்கும் அதனால் தான் ERODE நேற்று ஏற்றம் இன்று இவர்கள் , அரசு கஷ்டப்பட்டு சீரமைத்தல் இவர்கள் இப்படி

 • Sivaraman - chennai ,இந்தியா

  ராஜஸ்தானில் காங்கிரஸ் ஒட்டு கேட்ட விவகாரம் இன்னும் மறக்கவில்லை. நீங்களே உங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு நடந்த விவகாரம் . ஒட்டு கேட்பு விவகாரம் விசாரிக்கப் படவேண்டிய ஒன்று

Advertisement