dinamalar telegram
Advertisement

திபெத் இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்கும் சீனா

Share
பீஜிங்: திபெத் பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர், தங்களது குடும்பத்தில் உள்ள இளைஞர் ஒருவரை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என சீனா கட்டாயப்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக, இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், உளவுத்துறையினரின் அறிக்கைப்படி, சீன ராணுவம் மற்றும் உள்ளூர் ராணுவத்தில், திபெத்திய இளைஞர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அவர்களை எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த சீனா திட்டமிட்டு உள்ளது. திபெத்திய தன்னாட்சி பகுதியில் நடத்தப்படும் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம்களில், திபெத்திய குடும்பத்தில் ஒரு இளைஞர் ராணுவத்தில் சேர வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
திபெத் தன்னாட்சி பகுதியில் உள்ள பல்வேறு பல்கலைகழகங்களில் படிக்கும் 20 இளைஞர்கள் ராணுவ அகாடமியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் கிராமத்தினர், எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியை பற்றி அறிந்தவர்கள், ராணுவத்தின் ரோந்து பணிக்கு உதவும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளதாக உளவுத்துறையினர் கூறி உள்ளனர். இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (7)

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    அது என்ன புதிதாக திபத்திய தன்னாட்சிப்பகுதி என்று? திபெத் சீனாவின் கம்முநிஸ்ட்களின் காலடியில் குப்புற விழுந்து கிடக்கிறது.

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    எதிரி நாட்டினர்களின் கட்சிக்காரர்கள் , அந்நிய நாடான ஜனநாயக நாட்டில் முக்கிய பதவிகளில் அங்கம் வகிக்கும்போது இது என்ன ? வந்தே மாதரம்

  • RajanRajan - kerala,இந்தியா

    அங்கிருக்கும் தீபெத்தியர்களை நம் ராணுவத்திற்கு இழுத்து விட வேண்டும். அவர்களும் இங்குள்ள தீபெத்தியர்களுக்கு உறுதுணையாக செயலாற்றும் ராஜ தந்திரம் தலாய்லாமா அவர்கள் மூலம் முன்னெடுக்க பட வேண்டும். இந்த சீனத்தின் யுக்தியை முடியடிக்கும் வகையில் மிகவும் உக்கிரமாக நம் ராணுவம் செயலாற்ற வேண்டும். ஜெய் ஜவான் ஜெய் ஹிந்த்.

    • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

      ... சீனாவை வேவு பார்க்க சொன்ன இந்தியாவிலிருக்கிற எதிர்க்கட்சி தலைவர்களை வேவு பார்க்கிறீங்க ..., அவங்க தொலைபேசியை ஒட்டு கேட்க ஒரு தொலைபேசியின் ஒட்டு கேட்பு விலை ஐந்து கோடி ருபாய் கொடுத்து முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் தொலைபேசிகளை ஒட்டுகேட்டிருக்கிறீர்கள் . இந்த தந்திரத்தை சீனாவில் காட்டியிருப்பேர்களேயானால் அருணாச்சல பிரதேச எல்லையில் சீனாக்காரன் ஆக்கிரமித்திருக்கமாட்டான் .... நாமாவும் உஷாராகியிருப்போம் ...

    • N.K - Hamburg,ஜெர்மனி

      சீனாவை தான் ஒட்டு கேட்டிருப்பாங்க பார்த்தசாரதி, அவங்க இங்க இருக்குற எதிர் கட்சிக்குத்தான் அதிகமா கால் செஞ்சிருப்பாங்க போல, அதான் இங்கயும் ஒட்டு கேட்கவேண்டியதா போச்சு.

    • Money Money - Houston,யூ.எஸ்.ஏ

      அருமையான பதிவு

  • N.K - Hamburg,ஜெர்மனி

    அவர்கள் விசுவாசத்தை விலைக்கு வாங்க முடியாது. அவர்கள் நாட்டையே ஆக்கிரமித்து அவர்களையே ராணுவத்தில் சேர்த்தால் நாளை அது அவர்களுக்கு எதிராகவே திரும்பும்.

Advertisement