dinamalar telegram
Advertisement

ஆக்சிஜன் விவகாரத்தில் இணை அமைச்சர் மீது உரிமை மீறல் நோட்டீஸ்

Share
புதுடில்லி: 'கோவிட் 2வது அலையின்போது நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை' என, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் ராஜ்யசபாவில் நேற்று எழுத்துபூர்வமாக தெரிவித்தார்.
இந்நிலையில் சி.பி.ஐ., - எம்.பி., பினோய் விஸ்வம் மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் மீது உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்து உள்ளதாவது: ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாடு முழுவதும் உயிரிழந்தனர். இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் ஏராளமாக வந்தன. ஆக்சிஜன் சப்ளையைச் சீராக வழங்கக் கோரி ஒவ்வொரு மாநிலத்திலும் உயர் நீதிமன்றங்களில் மக்கள் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றமும் தலையிட்டு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சப்ளையை உறுதி செய்ய உத்தரவிட்டது. ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள் குறித்த கணக்கு இல்லை என, மத்திய அரசு தெரிவிக்கிறது.
நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். ஆனால் உயிரிழந்தவர்களை அவமானப்படுத்தும் வகையில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவாரின் பதில் இருக்கிறது. இதனால் இந்த விவகாரத்தில் உரிமை மீறல் தீர்மான நோட்டீசாக இதை எடுத்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (15)

  • Sathyanarayanan Sathyasekaren -

    Please don’t repeat the comment

  • Sathyanarayanan Sathyasekaren -

    Please don’t repeat the comment

  • Sathyanarayanan Sathyasekaren -

    Please don’t repeat the same comment

  • Sathyanarayanan Sathyasekaren -

    Please don’t repeat the comment

  • Sathyanarayanan Sathyasekaren -

    Please don’t repeat the comment

Advertisement