dinamalar telegram
Advertisement

தாயுடன் தொடர்பு: வாலிபரை எரித்து கொன்ற மகனிடம் விசாரணை

Share
திருப்பூர்: திருப்பூர் வெள்ளியங்காடு திருக்குமரன் நகரை சேர்ந்த, 30 வயது மதிக்கதக்க வாலிபர் இரு நாட்களுக்கு முன் மாயமானார். இதுகுறித்து, வீரபாண்டி போலீசார் விசாரித்தனர்.
மாயமான வாலிபரின் சடலம், அப்பகுதியில் உள்ள பாறைக்குழிக்குள் எரிந்த நிலையில் இருப்பது நேற்று தெரிந்தது. தாயுடன் வாலிபருக்கு கள்ள தொடர்பு இருப்பது மகனுக்கு தெரிந்தது. ஆத்திரமடைந்த மகன், வாலிபரை அடித்து, பாறைக்குழிக்குள் எரித்து கொன்றது தெரிந்தது. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையும் உள்ளது தெரிய வருகிறது. சம்பவ இடத்தை துணை கமிஷனர் அரவிந்த், உதவி கமிஷனர் வரதராஜன் பார்வையிட்டனர். கொலை தொடர்பாக, இரண்டு பேரிடம் வீரபாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement