dinamalar telegram
Advertisement

பா.ஜ.,வின் உண்மை தொண்டனாக இருப்பதில் பெருமை: எடியூரப்பா

Share
பெங்களூரு: பா.ஜ.,வின் உண்மையான தொண்டனாக இருப்பதில் நான் பெருமிதம் கொள்வதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக அவரது சொந்த கட்சியிலேயே பலரும் எதிர் கருத்தை தெரிவித்து வருகின்றனர். நீண்ட நாட்களாக கர்நாடகா மாநில பா.ஜ.,வில் புகைச்சல் நீடிக்கிறது. எடியூரப்பாவுக்கு 75 வயதுக்கு மேலாகிவிட்டதால் அவரை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என எடியூரப்பாவுக்கு எதிராக இருக்கும் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் மேலிட பொறுப்பாளர்களுக்கு கையெழுத்துடன் கடிதம் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை மேலிட பொறுப்பாளர்கள் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர்.
இதனால், முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்படுவார் என்ற தகவல் வெளியானது. இது குறித்து கருத்து தெரிவித்த எடியூரப்பா, தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக கூறினார். வரும் 26-ந் தேதி நடக்கவுள்ள பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்யவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:
பா.ஜ.,வின் உண்மையான தொண்டனாக இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். நான் சார்ந்த கட்சிக்கு சேவை செய்வது எனது மிகப்பெரிய கடமை. கட்சிக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு அனைவரும் நடந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன். யாரும் எவ்விதமான போராட்டத்திலோ, மரியாதைக் குறைவான செயல்களிலோ ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். எடியூரப்பாவின் இந்த பதிவு கர்நாடக அரசியலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

  • Vijayamohan - ஒட்டன்சத்திரம்,இந்தியா

    எடியூரப்பா அடுத்த ஜனாதிபதி ஆகவே பதவி விலக சம்மதம் தெரிவித்து பல நாளாகிவிட்டது

  • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

    இவருக்கு மட்டும் வயது விலக்கு அளித்து நீடிக்க வைத்துள்ளனர் என்றால் அதன் " சூட்சமம் " என்ன ?

  • ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் - ,

    Give way to Youngsters

    • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

      உண்மை டெல்லியில் 70 வயது மோடி எல்லாம் இறக்கி விட்டு ஒரு youngsters கொண்டு வந்து வருங்கால இந்தியா உருவாக்குங்கள்

    • Nsnatarajan Iyer - Bangalore,இந்தியா

      மோடி கஷ்டபட்டு வாழ்க்கையை தியாகம் பண்ணி கட்சியை வளர்ப்பாராம். துரவேஷ மாதிரி ஆளுங்க வெல்லம் மாதிரி சாப்பிடுவான் களாம்

    • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

      அதே தானே எடுயூரப்பா காரணடகாவில் தோற்று போன BJP க்கு குமாரசாமி கட்சியில் இருந்து MLA க்கள் விலைக்கு வாங்கி இவ்வளவு தில்லாலங்கடி வேலை செய்து தானே ஆட்சி மாற்றினார் என்னவோ யோக்கிய சிகாமணி கட்சி மாறி பேசுற

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    , காங்கிரஸ் க்கு நல்ல காலம் பிறக்குது

  • S.Baliah Seer - Chennai,இந்தியா

    கர்நாடகா அரசியலைத் தீர்மானிக்கும் நிலையில் லிங்காயத் இருப்பதால் அவர்களை பகைத்துக் கொண்டு வேறுயாரும் அரசியல் நடத்த முடியாது.

Advertisement