dinamalar telegram
Advertisement

பிரிட்டன் பிரமாண்ட போர்கப்பல் வருகை: இந்திய பெருங்கடலில் இந்தியா - பிரிட்டன் கூட்டுப்பயிற்சி

Share
புதுடில்லி: வங்கக் கடலில் இந்திய, பிரிட்டன் கடற்படைகள் கூட்டுப் போர்ப்பயிற்சியை இன்றும் (ஜூலை 22) நாளையும் நடத்தவுள்ளன. இந்தக் கூட்டுப்பயிற்சியில் பிரிட்டனின் மிகப் பெரிய போர்க்கப்பலான ‛ஹெச்எம்எஸ் குயின் எலிசபெத்' பங்கேற்கிறது.

இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தென் சீனக் கடலை, சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அதைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கத்திய நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. கடற்படையின் வலிமையை வெளிக்காட்டும் வகையில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சுமார் 40 நாடுகளுடன் தனித்தனியாகக் கூட்டுப்பயிற்சியை பிரிட்டன் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியா - பிரிட்டன் கடற்படைகள் இடையேயான கூட்டுப்பயிற்சி இந்தியப் பெருங்கடல் பகுதியில் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டுபோர்ப்பயிற்சியில் பங்கேற்பதற்காக, பிரிட்டனின் மிக பிரமாண்டமான போர்க்கப்பலான ‛ஹெச்எம்எஸ் குயின் எலிசபெத்' போா்க்கப்பல் இந்தியா வந்துள்ளது. அப்போர்க்கப்பலில் ‛எஃப்35பி' போர் விமானங்களையும், 14 ஹெலிகாப்டர்களையும் நிறுத்த முடியும். அக்கப்பலுடன் பிரிட்டன் கடற்படையின் 6 கப்பல்களும், ஒரு நீர்மூழ்கிக் கப்பலும் இந்தியாவுக்கு வந்துள்ளன. கூட்டுப் பயிற்சியின்போது, பல்வேறு வகையான பயிற்சிகளை இந்தியா-பிரிட்டன் கடற்படை வீரர்கள் இணைந்து மேற்கொள்ள உள்ளனர்.

ஹெச்எம்எஸ் குயின் எலிசபெத் போா்க்கப்பலின் மூலமாக மேற்கொள்ளப்படும் கூட்டுப்பயிற்சியானது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்த உதவும். இது பாதுகாப்பு விவகாரத்தில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என்று பிரிட்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து கர்நாடகாவிலுள்ள கார்வார் துறைமுகத்தில் அக்டோபர் 21 முதல் 23 வரை இந்திய, பிரிட்டன் கடற்படையினர் போர்ப்பயிற்சியை நடத்தவுள்ளனர். அதைத் தொடர்ந்து கோவா கடற்கரைப் பகுதியில் அக்டோபர் 24 முதல் 27-ம் தேதி வரை கூட்டுப்பயிற்சி நடைபெறும் என்று இந்திய கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போர் பயிற்சியில் இந்தியாவின் ராஜ்புத் கப்பல் உள்ளிட்ட 12 போர்க்கப்பல்கள், 30க்கும் மேற்பட்ட விமானங்களும் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement