dinamalar telegram
Advertisement

கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு 42 ஆக உயர்வு

Share
திருவனந்தபுரம்: கேரளாவில் கோவிட் வைரஸ் பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் அங்கு ஜிகா வைரஸ் நோயும் வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து கேரள சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளதாவது:பாறசாலை பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு முதலில் ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின்பு மேலும் சிலருக்கு நோய் பரவியது. இதையடுத்து நோய் அறிகுறி உள்ளவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதில் நேற்று முன்தினம் வரை 37 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. நேற்று மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களையும் சேர்த்து கேரளாவில் இதுவரை 42 பேர் ஜிகா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • நந்தகோபால், நெல்லை, in பெங்களூரு -

    ஜிகா வைரஸ், பேரே ஒரு மார்க்கமா இருக்கே, அந்த மார்க்கத்த சேர்ந்தவங்க அதிகம் அதனாலயோ? 🤔

  • Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    Some Chinese sponsored group is trying spread virus from Kerala, people wake up

  • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

    ஜிகா என்றால் கோபம் வரப்போகிறது ஒரு மார்கத்து காரர்களுக்கு ..

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    கேரளா, வைரஸ்களின் இந்திய தலை நகரம். எதனால்? கேரளா மாநிலத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்து போவோர் எண்ணிக்கை அதிகம். ஆகையால்தான் கேரளா இன்னும் அந்த கொடிய வைரஸ் பிடியிலிருந்து வர தத்தளிக்கிறது, தடுமாறுகிறது.

Advertisement