dinamalar telegram
Advertisement

"திமுக அரசுக்கே மிரட்டலா. அவர்கள் எத்தனை மிரட்டல்களை பார்த்தவர்கள்..."

Share
தமிழகத்தை, பா.ஜ., பிரிக்க வேண்டும் என நினைக்கவில்லை. எனினும், கொங்கு மண்டலத்தில், ஆளும், தி.மு.க., அரசு எப்படி செயலாற்றுகிறது என்பதை பொறுத்து, அந்த கோரிக்கையை பரிசீலிக்க, பா.ஜ., விரும்புகிறது.
-பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி

'தி.மு.க., அரசுக்கே மிரட்டலா; அவர்கள் எத்தனை மிரட்டல்களை பார்த்தவர்கள். அவர்கள், பனங்காட்டு நரிகள்; சலசலப்புக்கு அஞ்ச மாட்டார்கள்...' என, ஜாடை மாடையாக கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி:

போன் ஒட்டு கேட்பு புகாரில் சிக்கியுள்ள வெளிநாட்டு நிறுவனம், ஒப்பந்தங்களின்படி செயல்படக் கூடியது. இந்தியாவில் அந்த நிறுவனத்தை அமர்த்தியது யார்; அதற்கு யார் பணம் கொடுத்தது. மத்திய அரசு இல்லை என்றால் பிறர் யார்? உண்மையை சொல்ல வேண்டியது மோடி அரசின் கடமை.
-பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி

'இந்த விவகாரத்தை, பார்லி., கூடும் நாளில், பத்திரிகையில் வரச் செய்தது யார்? அவரின் பின்னணி குறித்தும் விசாரிக்க வேண்டும்...' என, பதிலடி கொடுக்கத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி அறிக்கை:

'சசிகலா இருந்த காலத்திலும் அ.தி.மு.க., தோற்றிருக்கிறது' என்கிறார், முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., அப்படி என்றால் சசிகலா தான் அன்று எல்லாமாக இருந்தாரா? ஆனால், இப்போது அவருக்கும், அ.தி.மு.க.,விற்கும் சம்பந்தமில்லை என்கிறீர்களே!
-தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன்

'அன்று எல்லாமாகத் தான் இருந்தார். ஜெ., மறைவுக்கு பின், கட்சியை விட்டு நீக்கியாகி விட்டது. அதனால் அவருக்கும், அ.தி.மு.க.,வுக்கும் தொடர்பு இல்லை என்கின்றனர்...' என, பதிலளிக்கத் துாண்டும் வகையில், தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கைராகுல், அவரது உதவியாளர்கள், நண்பர்கள் மொபைல் போன்களை மோடி அரசு தொடர்ந்து ஒட்டு கேட்டுக் கொண்டிருக்கிறது; ஆனாலும் ஒன்றும் கிடைக்க வில்லை. எம் தலைவரிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் அவரைப் பற்றிய பயம், பா.ஜ.,வை துாங்க விடாமல் துரத்துகிறது என்பது மட்டும் நிச்சயம்.
-தமிழக காங்., - எம்.பி., ஜோதிமணி

'ஆம். ஏதாவது இருந்தால் தானே மறைக்க முடியும் என, பா.ஜ.,வினர் பதிலளிக்கின்றனரே...' என, போட்டுக்கொடுக்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., - எம்.பி., ஜோதிமணி அறிக்கை

கொரோனா ஊரடங்கால் பலர் அவதிப்படும் வேளையில் மின் கட்டண கொள்ளையை அரசே நிகழ்த்துவது, மக்களை ரத்தக் கண்ணீர் வடிக்க வைத்துள்ளது.
-தமிழக பா.ஜ., பொருளாளர் சேகர்

'மக்களைப் பற்றி ரொம்ப கவலைப்படாதீங்க...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொருளாளர் சேகர் அறிக்கைShare
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (15)

 • திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,இந்தியா

  சும்மா சொல்லக் கூடாது சாமின்னா சாமிதான் சுருக்கு போட்டு தூக்கறாரே சுருக்கமா சொல்லுன்னு சொல்வார்கள் சுருக்கென்று சொல்வதில் சூரர்கள் சிலர் சுருக்கா (சீக்கிரமா) சொல்லுன்னு சொல்வார்கள் தஞ்சாவூர் பக்கம் சொல்லாமல் சொல்வார் சிலர் சொல்லாமல் கொல்வார் சிலர் சொல்ல முடியாதவர் சிலர் சொல்ல எதுவுமில்லை என சொல்லிக்கொண்டே இருப்பார் சிலர்

 • P.K.SELVARAJ - Chennai,இந்தியா

  இப்போது தான் ஓரளவுக்கு உங்கள் சொல்லத் தோன்றுகிறது சரியாக உள்ளது என தோன்றுகிறது. எந்த அரசானாலும் "இடிப்பார் இல்லா எமறா மன்னன் கெடுப்பாறிலானும் கெடும்" எந்த தவரான முடிவானாலும் முந்தைய அரசு செய்தது அதை நாங்களும் செய்கிறோம் என கூறுவது ஒரு அரசே அல்ல.

 • K BALASUBRAMANIAN - sattur,இந்தியா

  என்ன திடீர்னு திமுகவுக்கு ஆதரவாக சவுண்ட் கொடுக்கிற மாதிரி தெரியுது -

 • ஷண்முக பிரியன் - AMBATTUR,இந்தியா

  12 வருடம் ஆராய முடியாத மாணவ மாணவியரை ஒன்றரை மணிநேர தேர்வில் எப்படி ஆர்யா முடியும் , எப்படி இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகுஞ்சுகள் நண்ராக வளரும் ஆனால் அதன் ஆரோக்கியம் என்ன? நீட் தேர்வு குறித்து சொல்லியது

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  அம்மணி வானதி சொன்ன முருகனே இதோடு விட்டு விடுங்கள் என்று கதறி மேலும் இது அலுவலக பிழை என்றும் ஒரு இடத்தில TYPO ERROR என்று ஒரு டய்ப்பா வேறு இடத்திலும் அழுது விட்டார் இப்போ நீ இப்படி நீ உள்ளூரில் வட நாடு கூட்டம் வைத்து வெற்றி பெற்ற்றதால் அந்த நன்றிக்கு BEHAAR எல்லாம் சென்று பிரச்சாரம் முதலில் உள்ளுறில் ஓணான் பிடி அப்புறம் அசலூரில் அனகோண்டா பிடிக்கலாம்

Advertisement