dinamalar telegram
Advertisement

மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சக வரையறை மாறுது?

Share
மூன்று பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு நேற்று முன்தினம் வழங்கிய தீர்ப்பு ஒன்றால் மத்திய கூட்டுறவுத் துறையின் அதிகார எல்லைகள் மாற்றத்துக்கு உள்ளாகி இருப்பதாக சட்ட வல்லுனர்கள் கருதுகின்றனர்.


கடந்த 2011ம் ஆண்டு நம் அரசியல் சாசனத்தின் 97வது சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அது கூட்டுறவு சங்கங்கள் தொடர்பானது.அதன் வாயிலாக கூட்டுறவு சங்கங்கள் உருவாக்குவது அடிப்படை உரிமை ஆக்கப்பட்டதோடு கூட்டுறவு சங்கங்களை நிர்வகிப்பதில் மாநில அரசுகளுக்குப் பல்வேறு வரையறைகளையும் விதித்தது.இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர்.குறிப்பாக இது நம் அரசியல் சாசன அடிப்படை கட்டமைப்புக்கு எதிராக இருக்கிறது என்பதே வாதம்.

தனி அமைச்சகம்அதாவது மாநில பட்டியலில் உள்ளது கூட்டுறவு சங்கங்கள். இது தொடர்பாக ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்போது அதற்கு மாநில சட்டசபைகளில் பாதியேனும் ஒப்புதல் அளித்து அங்கீகரிக்க வேண்டும்.மேலும் கூட்டுறவு சங்கங்கள் என்பவை மாநில பட்டியலில் மட்டுமே இடம் பெற்றுள்ளதையும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர்.இந்த வாதங்களை ஏற்றுக் கொண்ட குஜராத் உயர் நீதிமன்றம் 97வது சட்ட திருத்தத்தில் உள்ள '9 பி' பிரிவை முழுமையாக நீக்கி 2013ல் உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பின் மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்டது. ஆர்.எப்.நாரிமன் பி.ஆர்.காவை கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்த இந்த வழக்கில் தான் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.உச்ச நீதிமன்ற அமர்வு குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டது. ஆனால் சட்டப் பிரிவு '9 பி' முழுமையாக நீக்காமல் அதை பல மாநில கூட்டுறவு சங்கங்களுக்கு மட்டும் பொருந்தும் என்று வரையறை செய்துள்ளது.இதன் அர்த்தம் தான் முக்கியமானது.மத்திய அரசில் புதிதாக கூட்டுறவுத் துறை என்ற தனி அமைச்சகம் உருவாக்கப்படவுள்ளது.

தீர்ப்புஉள்துறை அமைச்சராக உள்ள அமித் ஷாவுக்கு இத்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.இந்தத் துறையின் கீழ் என்னென்ன கூட்டுறவு சங்கங்கள் வரும் என்ற விவாதம் நடந்துவரும் வேளையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இதற்கு ஒரு எல்லையை வகுத்துஉள்ளது.இதன்படி மாநில அரசுகளின் கீழ்தான் கூட்டுறவு சங்கங்கள் வரும்.பல மாநில கூட்டுறவு சங்கங்கள் மட்டுமே புதிய மத்திய அமைச்சரகத்தின் கீழ் வரும் என்று விளக்கம் அளிக்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (7)

 • பாமரன் -

  ///...இதன்படி மாநில அரசுகளின் கீழ்தான் கூட்டுறவு சங்கங்கள் வரும்.பல மாநில கூட்டுறவு சங்கங்கள் மட்டுமே புதிய மத்திய அமைச்சரகத்தின் கீழ் வரும் என்று விளக்கம் அளிக்கின்றனர் சட்ட வல்லுனர்கள்....///.. இதுக்கு என்ன அர்த்தம்னு யாராவது சொன்னால் தேவலை...🤔

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  பெகாசஸ் இவர் தான் சூத்திர தாரி , மோடி கூட இதில் INTEREST இல்லை , இந்த தகிடு வேலை சேயும் SHAA தான் மூல காரணம் அதானால் தான் வெளியே வருவதில்லை , எந்த அரசை கவிழ்க்கலாம் எவன் எந்த ஊரில் செல்வாக்கு அவனுக்கு என்ன WEAKNESS இல்லை IT /ENFORCEMENT வைத்து மிரட்டி பணியவைப்பது இல்லை அப்படியே எப்படி மணிப்பூரில் 63 MLA க்கள் விலைக்கு வாங்கியது இது தான் இவர் வேலை இதற்க்கு தான் PEGASUS இவருக்கு உதவுகிறது / WATER GATE அமெரிக்காவில் ஒருதரை அளித்தது இங்கு PEGASUS , உப்பு சாப்பிட்டா தனி குடிச்சே ஆகணும் இது newton LAW

 • ஆரூர் ரங் -

  கேரள இடதுசாரிகள் கட்டுபாட்டில் உள்ள சிறிய கூட்டுறவு வங்கியில் 100 கோடி ரூபாய் கடன் 😡ஊழல். உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே அவர்களது சொத்து பத்திரங்கள் மறு அடமானம் வைக்கப்பட்டு இடதுசாரிகளின் கைத்தடிகள 100 கோடி ஆட்டையை👹👹 போட்டுள்ளனர் . நிச்சயம் அவர்களது அரசு இந்த ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக செயல்படும். இதற்குத்தான் மத்திய கட்டுபாடு தேவை. இல்லையெனில் டெபாஸிட்தாரர்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்படும்

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU

   ராங் :: முதலில் GUJARATH CO OP வங்கி demonitaization 850 கோடி செலுத்தியாயது யார் , போன வருடம் 50 லட்சம் வருமானம் அடுத்த வருடம் 900 கோடி லாபம் வரி 3 % கடீ , DETAIL போதும் என்று எண்ணுகிறேன் ஏன் இங்கே அதே காலத்தில் சேலம் COOP வங்கி யார் அதிக பணம் மாற்றியது பாருங்கள் அப்புறம் ஊர்க்கு உபதேசம் செய்யலாம்

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  இவர் இருக்கிறாரா என்ன மே மதம் உதயநிதி என்று சொல்லி விட்டு போனவர், MAY 2 இல் மம்தா தீதி கொடுத்த சம்மட்டி அடி இப்போ தான் மெல்ல எழுந்து வருகிறார் போல அடுத்து UP யில் ஒரு சம்மட்டி அடி விழுந்தால் கதி மோட்சம் தான்

 • சசிக்குமார் -

  வரவர கமல்ஹாசன் மாதிரி எழுத ஆரம்பிச்சுட்டீங்க.

Advertisement