dinamalar telegram
Advertisement

மாஜி போக்குவரத்து அமைச்சர் வீடுகளில் ரெய்டு ; அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாக புகார்

Share
சென்னை: அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். சட்டசபை தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியிடம் தோல்வியடைந்தார்.அமைச்சராக இருந்த போது விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இழப்பு ஏற்படுத்தி ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், கரூர் மற்றும் சென்னையில் உள்ள விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள் உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவரது உறவினர், நண்பர்கள் வீடு, குவாரிகள் அலுவலகங்களிலும் சோதனை நடக்கிறது.
Tamil News
Tamil News
Tamil News
கரூர் தோரணக்கல்லபட்டில், விஜயபாஸ்கர் ஆதரவாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஏகாம்பரம் வீட்டிலும் சோதனை நடத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (36)

  • அப்புசாமி -

    திமுக நேர்மையானவங்க. தொழில் நடத்துனா மந்திரியா இருக்க முடியாது. மந்திரியா இருந்தா சைடு பிசினஸ் நடத்த முடியாது. சமூக நீதி நிலைநாட்டப்படுகிறது.

  • அப்புசாமி -

    குவாரியிலும் பணத்த புதைச்சு வெச்சிருப்பாங்களோ? பாம்பறியும் பாம்பின் கால்.

  • Narayanan - chennai,இந்தியா

    ஆக இவரை அவரும் அவரை இவரும் மாற்றி மாற்றி சொல்லுவார்கள் . வழக்கு வாய்தா அரசு நடக்கும் . மக்களுக்கும் செய்தி பத்திரிகைகளுக்கும் விளையாட்டு நேரம் . இவர் பணம் படைத்தவர்கள் ஆகிவிட்டு நம்மை நாற்றாற்றில் விட்டுவிடும் அரசியல் கபடதாரிகள் .l

  • மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா

    //வீடு, குவாரிகள் அலுவலகங்களிலும் சோதனை நடக்கிறது.// குவாரி இல்லாத ஆடீம்கா மந்திரி இல்லை.

  • விமர்சகன் - kovai,இந்தியா

    அந்த கட்சியில வேலுமணி தான் நிறைய ஊழல் செய்து இருக்கிறார் முதல்ல அவர புடிங்க

Advertisement