dinamalar telegram
Advertisement

கொரோனா தடுப்பூசி பணி

Share
கூடலுார் : கூடலுாரில் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டனர்.

தேனீக்கள் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வட்டார மருத்துவ அலுவலர் முருகன், டாக்டர்கள் அரவிந்த், பூர்ணிமா தலைமையில் நடந்தது. 15 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணன், செவிலியர் ஜோதி, அறக்கட்டளை நிர்வாகிகள் பாண்டியன், அழகேசன், பாண்டி உடனிருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement