dinamalar telegram
Advertisement

குளமான நெடுஞ்சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

Share
கடம்பத்துார்--கடம்பத்துார் பகுதியில் குளமாக மாறிய நெடுஞ்சாலையால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.திருவள்ளூர் -- பேரம்பாக்கம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது கடம்பத்துார். இப்பகுதி வழியாக தனியார் தொழிற்சாலை பஸ்கள், கன ரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் என, தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இப்பகுதியில் உள்ள ஒன்றிய அலுவலகம் அருகே, விடையூர் செல்லும் சாலை சந்திப்பு பகுதியில், நெடுஞ்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இப்பகுதியில் மழை நீர், குளம் போல் தேங்கியுள்ளது.இதேபோல், தேசியமயமாக்கப்பட்ட வங்கி அருகே சாலை மோசமாக உள்ளது. இதனால், இவ்வழியே வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக, இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நெடுஞ்சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடம்பத்துார் பகுதியில் மேம்பால பணிகள் நிறைவடைந்தவுடன், நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படும்' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement