dinamalar telegram
Advertisement

அம்மன் கோவில்களில் கொள்ளை

Share
ஆர்.கே.பேட்டை-ஆடி மாதம் முதல் வாரத்திலேயே, அம்மன் கோவில்களில் நடந்த கொள்ளை சம்பவங்களால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.ஆர்.கே.பேட்டை சுற்றுப் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில், சனிக்கிழமை முதல், ஆடி மாத கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன. பக்தர்கள் பலரும் தங்களின் நேர்த்திக்கடனாக, அம்மனுக்கு பொங்கல் வைத்து, சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். உண்டியலில் காணிக்கையும் செலுத்துகின்றனர்.இந்நிலையில், ஆர்.கே.பேட்டை அடுத்த, சந்திரவிலாசபுரம் ஏரிக்கரையில் உள்ள பொன்னியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.மூலவர் அம்மன் கழுத்தில் இருந்த, ஒன்றரை சவரன் தாலி சரடு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. உண்டியல் உறுதியாக இருந்ததால், கொள்ளையர்களிடம் இருந்து தப்பியுள்ளது.இதே போல், கோபாலபுரம் அடுத்த, நேசனூர், கங்கயைம்மன் கோவிலிலும், நேற்று முன்தினம் கொள்ளை நடந்துள்ளது. இதில், அம்மன் கழுத்தில் இருந்த தாலி சரடு மற்றும் உண்டியலில் இருந்த பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement