dinamalar telegram
Advertisement

இது உங்கள் இடம் : புரியாமல் பேசுபவர் அறிவாளி அல்ல!

Share
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நான் பேசுவது புரியவில்லை என்றால், பக்கத்தில் இருப்பவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்' என மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல் கூறிஉள்ளார். பேசுவது புரிவதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. பேசுவதே புரியாமல் இருப்பது ஒன்று. அதன் கருத்து புரியாமல் இருப்பது மற்றொன்று. கமலை பொறுத்தவரை இரண்டுமே கோளாறு தான். அவரது தமிழறிவு இளங்கோவடிகள், கவிஞர் கண்ணதாசன் போன்றோரிடம் இருந்து கற்று கொண்டது என்றும் சொல்கிறார்.

கண்ணதாசன் பாடலில் தான் எத்தனை எளிமை இருக்கிறது. பாவம் அவரை ஏன், புரியாமல் பேசும் குட்டைக்குள் துாக்கி போடுகிறார்? ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களை படிக்க அகராதி தேவையில்லை. அத்தனை எளிமையாக இருக்கும். கமல் ஏன் இப்படி பேசுகிறார்? தாம் பேசுவது இன்னதென்று தனக்கே தெரியாமல் பேசுவது தான் புத்திசாலித்தனம் என்று நினைக்கிறாரோ? அவரின் புத்திசாலித்தனத்தை, தனியார் 'டிவி' நிகழ்ச்சி ஒன்றில் நெறியாளரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய போதே, அனைவரும் புரிந்து கொண்டோம். தெளிவில்லாமல் பேசுவது அறிவாளித்தனமும் அல்ல; அழகும் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதைவிட கொடுமை, அவர் பேச்சை புரிந்து கொள்ள, 'கோனார் நோட்ஸ்' வாங்குங்கள் என சொல்வது!

கமல் ஒன்றும் திருவள்ளுவர் இல்லை. இவரது வார்த்தைகளுக்கு உரை எழுத பரிமேலழகர் வருவதற்கு! அந்த வள்ளுவரே, 'கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்' எனக் கூறியுள்ளார். அதாவது, 'நம் பேச்சு, கேட்குறவங்களுக்கு பிடிக்கணும்;கேட்காதோர், அதை கேட்க முடியாமல் போய்விட்டதே என வருத்தப்பட வேண்டும்' என்கிறார். இன்னொரு குறளில், 'தன் கருத்தை பிறர் அறியுமாறு தெளிவாக விரித்து கூற தெரியாதவர், கொத்தாக மலர்ந்திருக்கும் மணமில்லாத மலர் போன்றவர்' என்கிறார், திருவள்ளுவர்.இது கமலுக்கு புரிகிறதா?
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (41)

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  கிரீமி லேயர் என்றால் என்ன? அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும். வசதி படைத்தவர்களின் அடையாளம் தான் கிரீமி லேயர் என்பது. வருமானவரியை இதனுடன் சேர்ந்து சிந்திப்பது நம்மை பயக்கும். ஐந்து லட்சம் வரை வருமான வரி விலக்கு என்றால் கிரீமி லேயருக்கும் அதையே ஏன் வைக்க கூடாது. அல்லது கிரீமி லேயருக்கு பதினைந்து லட்சம் என்று தீர்மானித்தால் வருமானவரி விலக்கையும் பதினைந்து லட்சம் என்று ஆக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசு, போதிய வருமானம் இல்லாதவர்களிடம் இருந்தும் வருமான வரி என்று சொல்லி, அவர்களை நசிப்பிப்பதாகவே பொருள் படும். ஆதலால் வேலைவாய்ப்புகள், பிடித்தம் போன்றவற்றில் கிரீமி லேயர் தொகை நிறயைக்கும் பொது வருமானவரி விலக்கையும் சேர்த்தே கணக்கு பண்ண வேண்டும். வருமானவரி செலுத்தும் ஒரு குடும்பத்துக்கு எதற்கு படிப்பிலும் வேலைவாய்ப்பிலும் சலுகை? இது அநியாயமாக இல்லை? இதை அரசு ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும்.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  இவரது தொலைபேசியையும் ஒட்டு கேட்கிறார்களாம். கேட்கிறவன் செத்தான் ஒன்னும்புரியாது

 • M Ramachandran - Chennai,இந்தியா

  மாணவ பருவத்தில் சில மாணவர்கள் மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க சில வார்தைய்கள் அவர்கள் வட்டத்திற்குள் புரியும் படி பேசுவார்கள். மற்றவர்கள் கேட்டு முழிப்பார்கள். பல கிறுக்குகள் உண்டு அது போல் இது ஒரு ரகம். அது போல் கமால் ஹாசனும் பேசுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

 • sri - mumbai,இந்தியா

  அவர் இப்படி பேசும் தமிழில் , தான்தயாரிக்கும் படங்களில் வசனம் எழுதியிருந்தால் , படம் பார்க்க வருகிற சிலரும் எட்டிக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். இப்போது , தேர்தல் தோல்விக்கு பிறகு , கொஞ்சம் பேச்சில் தெளிவு பிறந்திருக்கிறதே என்று பார்த்தால் , திரும்பவும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டுவிட்டது. ஒருவேளை , இப்போது யார் கேட்டால் என்ன கேட்காவிட்டால் என்ன , புரிந்தால் என்ன புரியாவிட்டால் என்ன என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார் போலிருக்கிறது . பாவம் , களைத்த இந்தியன்

 • vbs manian - hyderabad,இந்தியா

  பள்ளி கல்லூரி முடித்து விட்டு நடிப்புக்கு வந்திருக்கலாம்.வீட்டில் அவசரப்பட்டு விட்டார்கள்.

Advertisement