Load Image
Advertisement

திமுக வெற்றி நாங்கள் போட்ட பிச்சை; மோடி, அமித்ஷா புழு புழுத்து சாவார்கள்: பாதிரியார் சாபம்

Tamil News
ADVERTISEMENT

நாகர்கோவில் : 'கிறிஸ்தவர், முஸ்லிம்கள் போட்ட பிச்சைதான் தி.மு.க., வெற்றி' என்று கன்னியாகுமரி மாவட்ட பாதிரியார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்து மதம், கோயில்கள், பிரதமர் பற்றியும் மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.


கன்னியாகுமரி மாவட்டம் பனங்கரையில் சர்ச் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பிரார்த்தனை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதை கண்டித்து அருமனையில் அருமனை கிறிஸ்தவ இயக்கம், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை, முஸ்லிம் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது.


இதில் கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியதாவது: அமைச்சர் சேகர்பாபுவுக்கு மட்டுமல்ல மனோதங்கராஜூக்கும் சேர்த்து சொல்கிறேன். எத்தனை கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தினாலும், எத்தனை கோயிலில் துணி உடுக்காமல் சாமி கும்பிட்டாலும் ஒருவர் கூட ஓட்டு போட போவதில்லை. (கூட்டத்தினர் கை தட்டுகின்றனர்) மண்டைக்காட்டு அம்மனின் பக்தர்களும் தரப்போவதில்லை. ஹிந்துக்களும் ஓட்டு தரப்போவது இல்லை. நீங்கள் வெற்றி பெற்றீர்கள் என்றால் அது கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் போட்ட பிச்சை. (பலமாக கைதட்டுகின்றனர்)
Latest Tamil News

உங்களின் திறமையில் ஓட்டு வாங்கவில்லை. எங்கள் ஆயர்கள் கண் அசைப்பார்கள். பெந்தகொஸ்தே ஊழியர்கள் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்வார்கள். நாங்கள் சுரேஷ்ராஜனிடம் (திமுக மாவட்ட செயலாளர் - கன்னியாகுமரி), கிறிஸ்தவர்கள் வாழும் பகுதிகளில் சென்று ஓட்டு கேட்கட்டுமா என்று கேட்ட போது அவர் மறுத்து விட்டார். நீங்கள் கிறிஸ்வர்கள் பகுதியில் பிரசாரம் செய்தால் ஹிந்து ஓட்டுகள் கிடைக்காமல் போய் விடும் (கூட்டத்தினர் சிரிக்கின்றனர்) என்று கூறினார். அங்க என்ன ஆச்சு எம்.ஆர். காந்தி (பா.ஜ.,) வெற்றி வெற்றார். (கைதட்டுகின்றனர்)


நாடார்கள் வாழும் பகுதிகளில் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து, 'நான் நாடார்.. என்னை ஜெயிக்க வையுங்கள்' என்றார். நாடாருக்கு புத்தி உண்டா. இவர்களும் நம்ம ஆளு ஜெயிக்கட்டும் என்று ஓட்டு போட்டனர். 1982ல் மண்டைக்காடு கலவரத்தில் ஏழு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் எம்.ஆர்.காந்தி. இவர் நாகர்கோவிலில் நாடார் என்று சொல்கிறார். அருமனையில் ஹிந்து என்று சொல்கிறார். தி.மு.க.,வில் உள்ள நாடார்களும் சேர்ந்து சுரேஷ்ராஜனை தோற்கடித்தனர்.

Latest Tamil News
எம்.ஆர். காந்தி செருப்பு போடமாட்டார். பூமா தேவியை செருப்பு போட்டு மிதிக்க கூடாதாம். பாரத் மாதா மீது செருப்பு போட்டு மிதிக்க கூடாதாம். நம்ம ஏன் செருப்பு போடுறோம், பாரத் மாதாவின் அசிங்கம் நமது காலில் பட்டுவிடக்கூடாது என்பதற்காக. பூமா தேவியால் நமக்கு சொறி, சிரங்கு வந்து விடக்கூடாது என்பதற்காக (கைதட்டுகின்றனர்). தமிழக அரசு இலவமாக செருப்பு கொடுத்தது. அழகாக சொன்னார்கள் இஸ்லாமியர்கள்.. 'எங்கள் முடியை.. (சற்று சிந்திக்கிறார்.. கூட்டத்தினர் ரோமத்தை என குரல் எழுப்புகின்றனர்) ரோமத்தை.. எங்கள் பாஷையில், எங்க மயிரை கூட நீங்க பிடுங்க முடியாது.. (பலமாக கைதட்டுகின்றனர்) அதான் அர்த்தம்.. பைபிள்ளயே இருக்கு.. ஒரு மயிரை கூட நீ பிடுங்க முடியாது.


இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் ஒரு நண்பர் தனது குழந்தைக்கு பெயர் போட வேண்டி வந்தார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு போய் வந்துள்ளீர்கள். ஸ்டைலான பெயர் போடுங்கள் என்றார். ஸ்டேன் சாமி என்று பெயர் வைத்தேன். அவரது மரணத்துக்கு ஐ.நா., சபை கண்டனம் தெரிவித்துள்ளது. அவருக்கு நோபல் பரிசு கிடைக்க போகிறது. அவ்வாறு கிடைக்கும் போது மோடி, அமித்ஷாவின் முகத்தில் காறி துப்பும் நிகழ்ச்சியாக அமையும்.


மோடி, அமித்ஷா என ஏதாவது ஒரு பி.ஜே.பி., காரன் பெயர் போட்டானா. ஏன்னா அது அசிங்கமான பெயர். ஸ்டேன் சாமி சாக மாட்டார். அவர் வாழ்வார். அப்படிப்பட்ட ஒரு இறை நம்பக்கையில் வாழ்வதுதான் குமரி மாவட்ட கிறிஸ்தவ -முஸ்லிம் சமுதாயம். இந்த சமூகத்தை அழிக்கலாம் என்று நினைத்தால் அது நடக்காது. நாம் 42 சதவீதத்தில் இருந்தோம். இன்று 62 தாண்டி போய் கொண்டிருக்கிறோம். இன்னும் சிறிது நாளில் 70 சதவீதம் ஆகி விடுவோம்.(பலத்த கைதட்டல்)


பாதிரியார்னா மணி அடிக்கிற பூஜாரின்னு நினைக்காதீங்க. நல்லா படிச்சவங்க. ஸ்டேன் சாமி படித்தவர். பேராசிரியர். ஆதிவாசி மக்களுக்காக வாழ்ந்தவர். அவரது காலில் விலங்கு மாட்டி சிறை கைதி போல மருத்துவமனையில் அடைத்து வைத்தாய். நாம் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள். மோடியின் கடைசி காலம் மிகமிக பரிதாபமாக இருக்கும் (பலமாக கைதட்டுகின்றனர்). எழுதி வைத்து கொள்ளுங்கள்.நாம் நம்புகின்ற கடவுள் உயிரோடு இருக்கிறார் என்றால், அமித் ஷா, மோடியை நாயும், புழுக்களும் சாப்பிடும் நிலையை வரலாறு காண வேண்டும்... வரலாறு காணும். (பலமாக கைதட்டுகின்றனர்) எங்களது சாபம் உங்களை அழிக்கும்; நிர்மூலமாக்கும். இவ்வாறு பேசினார்.


அமைதியையும், அன்பையும் போதிக்கும் நிறைய பாதிரியார்கள் மத்தியில், இவர் போல இப்படி மததுவேஷம் பேசுபவர்களால் தான், நாட்டில் மத சண்டைகள் வந்து இப்படி கஷ்டப்படுகிறது. மதவெறியை தூண்டும் வகையில் அவர் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இந்த சர்ச்சை பேச்சால் தி.மு.க.,வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணியினர் கொதித்துப்போய் உள்ளனர். மாவட்டத்தின் பல போலீஸ் ஸ்டேஷன்களிலும் ஜார்ஜ் பொன்னையா மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட பா.ஜ., தலைவர் தர்மராஜ் எஸ்.பி.யிடம் மனு அளித்துள்ளார்.
Latest Tamil News

7 பிரிவுகளில் வழக்குஜார்ஜ் பொன்னையா மீது கீழ் காணும் 7 பிரிவுகளில் அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இ.பி.கோ. 143 (சட்ட விரோத கும்பலில் உறுப்பினராக இருத்தல்), 153 எ (மத, இன, ஜாதி விரோத உணர்வுகளை துாண்டுதல்), 295 எ (இரண்டு சமூகங்களுக்கிடையே ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்து அதன் மூலம் மோதல் ஏற்படுத்தி கலவரம் உருவாக்குதல்), 505(2) (மதமோதல்களை உருவாக்குதல்), 506 (1) (கொலை மிரட்டல்), 269 ( உயிருக்கு ஆபத்தான தொற்று நோயை பரப்பும் கவனமற்ற செயல்) தொற்றுநோய் சட்டம் 1897-3 (உயிருக்கு ஆபத்தான தொற்று நோய் பரவல் சட்டம்)

பாதிரியார் மீது மதுரையில் புகார்ஹிந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாகவும், ஹிந்து கிறிஸ்தவ, முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாகவும், மதகலவரத்தை துாண்டும் விதமாகவும் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு ஹிந்து மக்கள் கட்சி மதுரை தலைவர் சோலைகண்ணன், மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்ஹாவிடம் புகார் அளித்துள்ளார்.

news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து (642)

 • Balaji - Chennai,இந்தியா

  பொதுவாகவே உள்ளங்கை நெல்லிக்கனி போல வெட்ட வெளிச்சமாக தெரியும் உண்மை என்னவென்றால், கிறித்துவம் சென்ற இடங்கள் எல்லாமே இப்போது நம்பிக்கை அற்றவர்கள் நிறைந்த மாபியா கூடாரமாகவோ (தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா) அல்லது நம்பிக்கையை விட்டொழித்து வேறு வழியில் வாழ பழகிவிட்டவர்களாகவோ (வட அமேரிக்கா, ஐரோப்பா) மாறியதே யதார்த்தமான உண்மை. தென் மற்றும் வட அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான மண்ணின் மைந்தர்களை போர்வையில் வைரஸ் வைத்து நோய் பரப்பி கொன்றது அப்போதைய மிஷனரி... ஆப்பிரிக்காவில் கருப்பரை அடிமையாக்கி அந்த கண்டத்தையே அழித்தவர்கள் இவர்கள். இதை யாரும் மறுக்கவே முடியாது. அவர்களுக்கே உரிய உண்மை சரித்திரம் இது... இந்தியாவிலும் போர்த்துகீசியர்கள் கோவாவில் செய்த சித்து வேலை வரலாற்றில் இருக்கிறது. ஆனால் என்ன, அந்த தகிடுதத்தங்களை இந்தியா முழுமைக்கும் செய்ய முடியாமலும் அதே நேரத்தில் மதம் பரப்பி ஆகவேண்டிய வெறியிலும் இவர்கள் கிளப்பி விட்ட கதையே தீண்டாமை., ஜாதிவெறி போன்றவை... இவர்கள் சீக்கிரம் அகப்படுவார்கள்... இந்தியாவின் மண்ணின் மகிமையால் அதன் மாண்பு மிகு கலாச்சாரம் எப்போதும் நிலைத்து நிற்கும்.........

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  இவன மட்டும் கைது செஞ்சா போதுமா? இவன் பேசியதை கைதட்டி ஆர்ப்பரித்த அந்த கூட்டம் மற்றும் உள்ளத்தளவில் இவன் பொறுக்கித்தனமான பேச்சை ரசித்த அணைத்து கயவர்களையும் அல்லவா ஒன்றாக கைது செய்யவேண்டும்? இப்போதில்லாவிட்டாலும், என்றேனும் ஒருநாள் இந்தியா இவர்களிடமிருந்து விடுதலை பெரும் நாள் வந்தே தீரும்.

 • Kumar - chennai,இந்தியா

  பாதிரியார் உனக்கு உன் மதம் பெரிசு எங்கே இஸ்லாம் மதம் பற்றி அவதூறாக பேசி பார் பார்கலாம் உனக்கு தைரியம் இருந்தால், நீ பேச மாட்டே ஏனா உன்ன பார்த எடத்துல வெட்டி போட்டிருவாங்க இஸ்லாம் சகோதரர்கள் உன் உயிருக்கு உத்திரவாதம் இருக்காது ஆனா இந்து மதம் சகிப்பு தன்மை உடையது. என்ன சொன்னே வெள்ளை உடை வீரசாமி பாரத மாதா மிதிச்சா சொறி சிரங்கு வருமாம் அதான் செருப்பு போட்டு நடக்கிறோம். வாய்ல நல்லா வந்திரும். பாரத அண்னைக்கு மொழி மதம் ஜாதி கிடையாது எல்லோரும் வணங்கும் தெய்வம் உங்கள போல பாஸ்டர்கள் வெள்ளை உடை போட்டுக் கொண்டு நடத்தும் பித்தலாட்டாம் தெரியாத ஒரு CD ய வச்சு கிட்னி கல்ல கரச்ச கபோதி கூட்டம் தானே நீங்க Fruad பயலுக அடுத்த மதத்த பத்தி தப்ப விமர்சனம் பன்ற நீ மொதல்ல ஒரு உண்மையான கிருஸ்துவனா? Chance இல்ல ராஜா. மதம் என்னும் போர்வைக்குள் ஒளிந்திருக்கும் ஓநாய் தானே நீ

 • Raja - Coimbatore,இந்தியா

  மத போதகர்கள் மத போதகர்களாக மட்டுமே இருக்க வேண்டும். தேவை இல்லாத விஷயங்களில் ஈடுபட கூடாது. "இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான் தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது" என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. இதன் அர்த்தம் கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்றால் அதை மாத்திரம் செய்ய வேண்டும். உலக விஷயங்களில் தலையிட கூடாது என்பதே. இது தெரியாமல் பல மத போதகர்கள் ஊழியத்துடன் சேர்த்து மற்ற விஷயங்களிலும் தங்கள் மூக்கை நுழைகின்றனர். இது போன்ற செயல் கிறிஸ்தவர்களுக்கு மேலும் அவப்பெயரையே உண்டாக்கும் என்பதை அறியாமல் இருக்கிறார்கள்.

 • PERUMAL A - KOCHI,இந்தியா

  இப்படி பேசிய பாதிரியாருக்கு தக்க தண்டனை வழங்கவேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement