dinamalar telegram
Advertisement

மெக்காவில் பாதுகாப்பு பணியில் பெண்கள்

Share
Tamil News
மெக்கா:மேற்காசிய நாடான, சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில், முதல் முறையாக பாதுகாப்புப் பணியில், ராணுவத்தைச் சேர்ந்த பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முஸ்லிம்கள் புனிதமாக கருதும், மெக்காவுக்கு, ஆண்டுதோறும் உலகெங்கிலும் இருந்து, லட்சக்கணக்கான மக்கள் புனித யாத்திரை மேற்கொள்வர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்தாண்டைப் போலவே, இந்தாண்டும், வெளிநாட்டவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.நாட்டின் சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை, பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மான் மேற்கொண்டு வருகிறார்.

முஸ்லிம் பழமைவாத கொள்கைகளை மாற்றி வருகிறார். பெண்களுக்கு அதிக அதிகாரம், சுதந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. ராணுவத்திலும் பெண்கள் அதிகளவில் சேர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், மெக்கா மற்றும் மதீனாவில், பாதுகாப்பு பணியில், ராணுவத்தைச் சேர்ந்த பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கடந்த, ஏப்.,ல் இருந்து இவர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement