dinamalar telegram
Advertisement

ம.தி.மு.க., -பொது செயலராகிறார் வைகோ மகன் வையாபுரி?

Share
Tamil News
ம.தி.மு.க., பொதுச்செயலர் பதவி வழங்குவதன் முன்னோட்டமாக, காலியாக உள்ள துணை பொதுச் செயலர் பதவிக்கு, வையாபுரி நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ம.தி.மு.க., துணைப் பொதுச்செயலர்கள் நாசரேத் துரை, தஞ்சாவூர் துரைபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும், உடல் நலக்குறைவு காரணமாக சமீபத்தில் மரணம் அடைந்தனர்.
அவர்கள் வகித்த வந்த பதவிக்கு, அக்கட்சியில் கடும் போட்டி நிலவுகிறது.

ம.தி.மு.க., உயர்நிலைக்குழு உறுப்பினர் புலவர் செவந்தியப்பன், கன்னியாகுமரி மாவட்ட செயலர் வெற்றி உள்ளிட்ட நிர்வாகிகள் அப்பதவியை எதிர்பார்க்கின்றனர்.ஆனால், பொதுச் செயலர் வைகோவின் மகன் வையாபுரிக்கு, துணைப்பொதுச் செயலர் பதவி வழங்க வேண்டும் என, மாவட்டச் செயலர்கள் சிலர் விருப்பம் தெரிவிக்கின்றனர்.

வைகோவின் உடல் நலம் கருதி, அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் பட்சத்தில், அவர் வகித்து வரும் பொதுச் செயலர் பதவியை வையாபுரி தான் ஏற்க வேண்டும். அதற்கு முன்னோட்டமாக, துணை பொதுச் செயலராக வையாபுரியை நியமித்து, அரசியல் பாடத்தை வைகோ கற்றுத்தர வேண்டும் என, கட்சியினர் விருப்பம்தெரிவித்துள்ளனர்.

அரசியலை விரும்பாமல் ஒதுங்கி இருந்த வையாபுரி, தொண்டர்களின் வற்புறுத்தலால், சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்தார். தற்போது அவருயை படங்கள் பேனர், போஸ்டர்களில், வைகோவுக்கு இணையாக போடப்பட்டு வருகிறது.முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும், வாழ்த்து தெரிவித்த வையாபுரி, அவருக்கு நெருக்கமானார். வைகோ பங்கேற்க முடியாத கட்சியினரின் இல்ல விழாக்களில் வையாபுரி பங்கேற்று வருகிறார். எதிர்காலத்தில், கட்சியின் பொதுச் செயலர் பதவியை நோக்கி, வையாபுரியின் அரசியல் நகர்வுகள் நிகழ்ந்தாலும் ஆச்சரியமில்லை என, ம.தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர். - நமது நிருபர் -
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (43)

 • M Ramachandran - Chennai,இந்தியா

  இதெல்லாம் வேடிக்கையில்லை.சென்னையில் தெருவெல்லாம் ஒரு இலங்கை தமிழர்களின் தீ மு காவுடன் சேர்ந்து பதவிக்கு மடிபிட்சியெடுத்த துரோகியை தமிழல்யீல விடுதலை தலைவர் ப்ரபாகரனநை ஒப்பிட்டு போஸ்டர் எழுதும் த்ரோகிகலை ராஜ பக்கதேஆயிடம் கையேந்தி பரிசு வாங்கி சிரித்த முகமுடன் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த கும்பலை என்ன செய்வது. அவர் உயிருடன் இல்லை என்ற தைறியத்தில் எனதை வேண்டு மென்றாலும் ஆசை போராடுபவர்களை என்ன இனத்தில் சேர்ப்பது.

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  யாருமே வராத கடையில் எவனுக்கய்யா டீ ஆத்துறீங்க ?ஆனா ஒன்னு கலிங்கா பட்டி கிராமத்திலே இவன் பேமிலி பெரும் ஆளா இருக்கும் ஜமீனுக்கு வாரிசு உருவாச்சு ஆனா வையாபுரி வைகோ போல 'போட்டதை அப்படியே திருப்பி போட்டு பேசும் ' சாமர்த்தியம் (?) 'உள்ளவரா ?மேலும் உதய நிதிக்கு ஜால்ரா அடிப்பாரா ?திமுக தலைமை இந்த அப்பாய்ண்ட் மென்ட் யை அங்கீகரிச்சாச்சா ?

 • Ramachandran V - Chennai,இந்தியா

  வேறு யாராவது செயலாளர் ஆகி விட முடியுமா? திராவிட katciyil

 • M Ramachandran - Chennai,இந்தியா

  வைகோ இலங்கை மக்களுக்கும் பிரபாகரனுக்கும் காங்கிரஸுடன் சேர்ந்து தீ மு க்கா செய்த த்ரோகம் அவர்க்ளோடு கைகோர்த்தது .அதை மன்னிக்க இயலாது.

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  திமுக 'குடும்ப கட்சி'இன்னு வைகோ சொன்னார் அன்று -முக வின் பதில் -ஒரு பெண்ணை பார்த்து குடும்ப பெண் என்று சொன்னால் என்ன அர்த்தம் ,மற்ற பெண்கள் எல்லோரும் குடும்ப பெண்கள் இல்லைன்னு தானே அர்த்தம் (வைகோ கட்சி உட்பட ) ஜீரணித்துக்கொண்ட வைகோ ஸ்டாலின் காலில் விழ வில்லை யா ?இப்போ 'கலிங்க பட்டி ஜமீன் 'உருவாக்க முயற்சிக்கிறார் ?

Advertisement