dinamalar telegram
Advertisement

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பலி இல்லை: துவங்கியது அரசியல் வார்த்தை போர்

Share
Tamil News
புதுடில்லி:'ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக, எந்த மாநில அரசும் தெரிவிக்கவில்லை' என, ராஜ்ய சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, பா.ஜ., மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே வார்த்தை போர் துவங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை, இந்தாண்டு மார்ச், ஏப்., மாதங்களில் தீவிரமடைந்தது. அப்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆக்சிஜன், மருந்து, மருத்துவமனைகளில் படுக்கைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

விமர்சனம்இந்நிலையில், ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு நேற்று முன்தினம் அளித்த பதிவில், 'கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்பு ஏற்பட்டதாக, எந்த மாநில, யூனியன் பிரதேச அரசும் தெரிவிக்கவில்லை' என, மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்திருந்தார்.

இது இப்போது கடும் விவாதத்தை துவக்கியுள்ளது. காங்., ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், மத்திய அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்துள்ளன.காங்., பொதுச் செயலர் பிரியங்கா, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் எந்த மரணமும் ஏற்படவில்லை. ஆனால், ஆக்சிஜன் ஏற்றுமதியை அரசு 700 சதவீதம் உயர்த்தியது;ஆக்சிஜன் வினியோகத்துக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் செய்யாதது; நிபுணர் குழுவின் அறிவுரையை கேட்காதது; தேவையான ஆக்சிஜனுக்கு ஏற்பாடு செய்யாதது போன்ற காரணங்களால் இறந்திருக்கலாம்.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

'ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் யாரும் உயிரிழக்கவில்லை என்றால், பல மருத்துவமனைகள் நீதிமன்றங்களை அவசரமாக அணுகியது ஏன். ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து தணிக்கை செய்ய குழு அமைக்க முயன்றோம். ஆனால், மத்திய அரசு தடுத்துவிட்டது' என, டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார்.

பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய பிரதேச சுகாதார அமைச்சர் விஷ்வாஸ் சாரங்க், 'எந்த மாநில அரசும் ஆக்சிஜனால் உயிரிழப்பு ஏற்பட்டதாக மத்திய அரசுக்கு தெரிவிக்கவில்லை.'அதைத் தான், அமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தில் ஆளும் தி.மு.க.,வைச் சேர்ந்த, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் யாரும் உயிரிழக்கவில்லை என்று கூறியுள்ளார்' என, குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ., செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியுள்ளதாவது:சுகாதாரம் என்பது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அளித்த தகவல்களின் அடிப்படையில் தான், மத்திய அரசு பதில் அளித்துள்ளது. 'ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை' என, மத்திய அரசுக்கு தெரிவித்து விட்டு, தற்போது மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் விமர்சனம் வைக்கின்றன. இது முழுக்க முழுக்க அரசியல்.

உள்நோக்கம்சமூக வலைதளங்களில் தொடர்ந்து பொய்களை பதிவிட்டு வரும், காங்., முன்னாள் தலைவர் ராகுல், அவருடைய கட்சி ஆளும் மாநில முதல்வர்களிடம், ஏன் பொய் சொன்னீர்கள் என்று கேட்க வேண்டும்.டில்லி ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் 21 பேர் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இறந்ததாக கூறப்பட்டது.

உயர் நீதிமன்ற விசாரணையில், 'ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் யாரும் இறக்கவில்லை' என, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கூறியது. ஆனால், தற்போது விமர்சிக்கிறது.மஹாராஷ்டிரா அரசும், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் எந்த மரணமும் ஏற்படவில்லை என, நீதிமன்றத்தில் கூறியுள்ளது. சத்தீஸ்கர் என, பல மாநிலங்களும் நீதிமன்றங்களில் இதை கூறியுள்ளன.எந்த மாநில அரசின் கைகளையும் நாங்கள் கட்டி வைக்கவில்லையே. மாநில அரசுகள் கூறியதை, மத்திய அரசு சொன்னால், அதற்கு விமர்சிக்கின்றனர். அனைத்திலும் அரசியல் செய்வது மட்டுமே அவர்களுடைய நோக்கமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (9)

 • RajanRajan - kerala,இந்தியா

  குரானானால் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பவர்களை பற்றி சற்றும் கவலை படாமல் ஆக்சிஜன் சிலிண்டரை கள்ளச்சந்தையில் கொள்ளைவிலையில் விற்று துட்டு பார்த்தவங்களையும் நோயாளியை முன்று நாட்கள் ICU வில் வைத்து எட்டு லட்ச்சம் பத்து லட்ச்சம்னு பணம் கறந்த தனியார் மருத்துவ மனைகளை பற்றி எல்லாம் விவாதிக்க நாதி இல்லை. இவிங்க அடிச்ச கூத்திலே இறந்தவர்களின் கணக்கு கேட்டு கும்மியடிக்கிறானுங்க வெட்கமில்லாமல். இவிங்களை வச்சு நாடு உருபடணுமாக்கும். வந்தே மாதரம்.

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  மாநிலங்கள் ஆக்சிசன் இறப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை விடலாம். அது ஒரு வெள்ளை காகிதம் ஆக இருக்கும். தமிழ்நாட்டின் அமைச்சர் ஒரு கூட்டத்திலேயே நம் மாநிலத்தில் ஆக்சிசன் தட்டுப்பாடு காரணமாக எவரும் உயிர் இழக்கவில்லை என்று 2 நாள் முன்னதாக சொல்லி இருக்கிறார்.

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  BJP கு அரசியல் செய்யத்தெரியவில்லை. ஒவ்வொரு திருட்டு மாநில அரசும் மிக தெளிவாக 'ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிர் இழப்புகள் ஏற்படவில்லை' என கோர்டில் பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளன. இதை எடுத்து கூறும்போது துல்லியமாக அவர்கள் அவ்வாறு கூறியிருக்கிறார்கள் என எடுத்துரைக்காமல், எதோ மத்திய அரசே அதன் கருத்தை கூறுவதுபோல் பதில் கொடுத்திருப்பது மிகவும் அரசியலில் அனுபவமில்லாத நிலையை காட்டுகிறது. சுகாதாரம் மாநிலத்தின் பொறுப்பு எனும்போது, பின்விளைவுகளுக்கு அவர்கள்தான் முழுப்பொறுப்பு, மத்திய அரசு தன வசம் உள்ள ஆற்றல்களை கொடுத்து உதவும், அதை வைத்து மக்களின் பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டியது மாநில அரசுகளின் கடமை/பொறுப்பு என தீர்க்கமாக கூறாமல், அனாவசிய சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும் வகையில் மந்திரிகள் பேசுவது வருந்தத்தக்கது. சரி, திசைதிருப்பதற்காக இந்த சர்ச்சைகளை வேண்டுமென்றே கிளப்புகிறார்கள் என நினைக்கவும் இடமில்லை, ஏனென்றால், வேறு எந்த கொள்கை முடிவுகளையும் பத்திரிக்கைகளின் வெளிச்சமில்லாமல் செயல்படுத்த மத்திய அரசு தற்சமயம் முயலவில்லை.

 • RD Rameshbabu - madurai,இந்தியா

  கொரானாவால் மரணம் எதுவும் நடக்கவில்லை.

 • Uthiran - chennai,இந்தியா

  உச்ச பஞ்சாயத்து அமைப்பு இந்த அறிக்கையை பற்றி என்ன கருத்து சொல்லப் போகிறது? டெல்லி உயர் பஞ்சாயத்து மத்திய அரசை எங்கேயாவது கொள்ளையடித்தாவது ஆக்ஸிஜன் கொண்டு வா என்றது.. அதன் பின் மத்திய அரசு மாநில அரசுகளின் ஆக்சிகன் இருப்பையும் தேவையையும் ஆடிட் செய்து கெஜ்ரிவாலை தோலுரித்து காட்டியவுடன் டெல்லி உயர் பஞ்சாயத்து மவுனமாகியது. இப்பொழுது மத்திய அரசு உயர், உச்ச பஞ்சாயத்துகளில் தாக்கல் செய்த ஆவணங்களை பாரளுமன்றத்தில் தாக்கல் செய்து சட்டபூர்வமான ஆதாரமாக ஆவணமாக மாற்றி விட்டது.. உயர், உச்ச பஞ்சாயத்துகள் தான்தோன்றித்தனமும், அவசரக்குடுக்கைத்தனமும் சேர்ந்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்பது ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்தி..

Advertisement