dinamalar telegram
Advertisement

ஆபாச பட வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் கைது

Share
மும்பை: ஆபாச பட வழக்கில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ்குந்த்ராவை மும்பை போலீசார் கைது செய்தனர்.


சில செயலிகள் மூலம் ஆபாச படங்கள் தயாரித்து, அதனை விநியோகம் செய்ததாக கடந்த பிப்., மாதம் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டார்.


இது தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆபாச படங்களை தயாரித்து, விநியோகம் செய்ததாக கடந்த பிப்., மாதம் தொடரப்பட்ட வழக்கில், விசாரணைக்கு பின்னர் ராஜ்குந்த்ரா நேற்று(ஜூலை19) கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியாக அவர் உள்ளது தெரியவருகிறது. அவருக்கு எதிராக தேவையான ஆதாரங்கள் உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


ஆனால், இதனை மறுத்துள்ள ராஜ்குந்த்ரா, ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    இருக்கிற பணம் பத்தாதா?

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    இவன் MMA என்ற கண்றாவி விளையாட்டை பிரபலம் செய்கிறான்.

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    இவனுக்கு இதே வேலைதான். ஆனால் 'தொழிலதிபர்' (businessman) என்று பெயர்.

Advertisement