dinamalar telegram
Advertisement

ஜூலை 19-ல் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு

Share
Tamil News
சென்னை: ஜூலை 19ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்க வில்லை. பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வு இல்லாமல் மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவு செய்ய கமிட்டி அமைக்கப்பட்டது.இந்த கமிட்டியின் பரிந்துரைப்படி, 10ம் வகுப்பு, பிளஸ் 1 பொது தேர்வுகள் மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வு அடிப்படையில், மதிப்பெண் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதன்படி, மாவட்ட வாரியாக மாணவர்களுக்கான மதிப்பெண் நிர்ணய பணிகள் முடிந்து உள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும், முந்தைய தேர்வு அடிப்படையிலான மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டு, அரசு தேர்வு துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, மதிப்பெண் வழங்குவதற்கான முறைகள் குறித்து, தமிழக பள்ளி கல்வித்துறை, அரசாணை வெளியிட்டது. முதன்மை செயலர் காகர்லா உஷா பிறப்பித்த அரசாணையில், மதிப்பெண்களை எப்படி கணக்கிடுவது என்ற விபரம் இடம் பெற்றுள்ளது.இந்த அரசாணை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை 19 ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். மதிப்பெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் முடிவுகளை அறியலாம். முடிவுகளை, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, dge2.tn.nic.in, dge.tn.gov.in முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மதிப்பெண் பட்டியலை வரும் 22ம் தேதி முதல், www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement