இது உங்கள் இடம் : கல்வி துறைக்கு திண்டுக்கல் பூட்டு!
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
எஸ். பழனிவேல், திருமாளம், திருவாரூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக பாடநுால் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக லியோனி நியமிக்கப்பட்டது, பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. லியோனி ஆசிரியராக பணியாற்றியவர் தான். பட்டிமன்றம் வாயிலாக பிரபலமாகி, பின் தி.மு.க.,வில் இணைந்தவர். இவரது அரசியல் பேச்சு ரசிக்கத்தக்கதாக இருக்காது; அநாகரிகமாக இருக்கும். இதனால் தேர்தல் காலத்தில் இவர் மீது அவமதிப்பு வழக்குகள் நிறைய போடப்படும்.

கடந்த தேர்தல் பிரசாரத்தில், பெண்களின் இடுப்பை பற்றி வர்ணித்து பலரின் கண்டனங்களுக்கு உள்ளானார். இப்படிப்பட்ட ஒருவரை, பாடநுால் நிறுவனத்துக்கு தலைவராக நியமித்தால் கல்வித் துறையின் நிலை என்னவாகும்? பாடநுால் நிறுவனத்தின் பணி, அறிவை வளர்க்கும் புத்தகங்களை தயாரிப்பது. புதிதாக பொறுப்பேற்றுள்ள லியோனி, 'பாட புத்தகங்களில் இடம்பெற்றுள்ள 'மத்திய அரசு' என்ற வார்த்தையை நீக்கி, 'ஒன்றிய அரசு' என மாற்றப்படும்' என கூறி உள்ளார். கற்கும், கற்பிக்கும் திறன் பற்றியும், எவ்வாறு பாட நுால்களின் தரம் மேம்படுத்தப்படும் என்பது பற்றியும் அவர் வாயை திறக்கவில்லை. அரசுப் பள்ளிகளையே நம்பி இருக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு என்ன செய்ய போகிறோம் என்றும், அவர் சொல்லவில்லை.

'ஒன்றிய அரசு' என்ற வார்த்தையை பிரபலப்படுத்த வேண்டும் என்பது மட்டும் தான், அவரின் நோக்கமாக இருக்கிறது. 'இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து, அதனை அவன்கண் விடல்' என திருவள்ளுவர் தெளிவாக கூறி உள்ளார். அதன் பொருள் புரிந்து, முதல்வர் ஸ்டாலின் தன் முடிவுகளை அறிவிக்கலாம். பாடநுால் நிறுவனம் என்பது, பட்டிமன்றம் நடத்தும் மேடையும் அல்ல; அநாகரிகமாக பேச அரசியல் மேடையும் அல்ல... அதில் நம் மாநிலத்தின் கல்வித் தரம், மாணவர்களின் எதிர்காலம் அடங்கி உள்ளது.
லியோனிக்கு ஏதோ ஒரு வாரியத் தலைவர் பதவி கொடுத்து, தி.மு.க., அரசு தன் நன்றிக் கடனைச் செலுத்தி இருக்கலாம். அதை விடுத்து, கல்வி போன்ற முதன்மை துறைகளை கொடுப்பது அழகல்ல. அரசுப்பள்ளிகளின் தரம் கேள்விக்குரியதாக இருக்கும் நிலையில், அதை உயர்த்து-வதற்கான முயற்சிகளை செய்யாமல், அதற்கு 'திண்டுக்கல் பூட்டை' போட்டுள்ளார், முதல்வர் ஸ்டாலின்.
வாசகர் கருத்து (160)
திண்டுக்கல் ஊரின் பெயரை கெடுக்க பிறந்தவர். டட்லி பள்ளிக்கூடத்தில் அவரது ஒழுக்கம் கொடிகட்டி பறந்தது. கிறித்துவர், கிறித்துவ பள்ளி என்பதால் வெளியே தெரியவில்லை
இதை பற்றி எழுதுவதா வேண்டாமா என்ற ஒரு குழப்பம் இருந்தது. அவர் ஒரு ஆசிரியர் அதுவும் பள்ளி மாணவர்களுக்கு அறிவியலை போதித்த ஆசிரியர். குறை சொல்லக்கூடாது என்பதற்காக. அவர் என்ன செய்யவேண்டும் என்பதை எதிர்பார்ப்பாக எழுதலாம் என்று நினைத்ததேன். பாடநூல் நிறுவனத்தில் தலைவராக இருப்பதால் அதில் அவருக்கு இருக்கும் பொறுப்புக்களை சிறப்பாக செய்யலாம். முதலாவதாக பாடநூல்களை அச்சிட்டு மட்டுமே தருவதில் கவனம் செலுத்தாமல் அதை வெறும் நிர்வாக வேலையாக விட்டு விட்டு, அதன் பொருளலூட்டத்தில் உள்ள குறைகளை சரிசெய்யவேண்டும். பாடநூல் நல்ல தரத்தில் வரவேண்டும். பாடநூல்கள் மட்டும் போதும் என்ற அளவிற்கு அது மேம்படுத்தப்படவேண்டும். புத்தக சுமை அதிகம் என்பதை உணரவவேண்டும். பாடநூல் ஒருபக்கம் இருந்தாலும் அதற்காக பிரத்தியேகமாக பல கைடுகளை தனியாக வாங்க வேண்டி இருக்கிறது. ஒரு பாடநூல் அனைத்தையும் தெளிவாக புரியவைக்கும் படியும் தாமாக அறிந்து கொள்ளத்தக்க வகையிலும் இருக்கவேண்டும். அந்த பாடநூலிலேயே பல கேள்விகளும் அதற்காக விடைகளும் இருக்கவேண்டும். நிறைய பயிற்சிகளை அளிக்கவல்லதாக இருக்கவேண்டும். ஆசிரியரின் உதவிகள் இன்றைய ஆன்லைன் முறையில் பெரிதளவில் கிடைக்கவழியில்லை என்பதால் சுயமாக பயிலும் வகையில் பாடநூலை மேம்படுத்தலாம். மற்றும் அதில் தேவையற்ற புரியாத அல்லது கடினமான வார்த்தை பிரயோகங்களை தவிர்க்கலாம். உதாரணமாக விலங்கினங்களில் பெற்றோர் கரிசனம் மனிதனிடத்தில் மட்டுமே இருக்கிறது என்று ஒரு வாக்கியம் மனிதனின் சிறப்பை வெளிப்படுத்துவகுத்தாக இருக்கிறது. கரிசனம் என்ற வார்த்தைகள் பள்ளி பருவத்தினருக்கு புதியது, அதை தெளிவாக வில்லாகவோ அதற்கான பொருளை தருவதோ இல்லை. அமெச்சூர் செயல்படும் முறை விளக்கவும் என்று இயற்பியலில் வருகிறது. இது போன்ற கலப்பு வார்த்தைகளும் அதன் பொருள் தெரியாததாலும் படிக்கும் மாணவர்களுக்கு மனதில் ஒருவித எரிச்சலும் புரிந்து கொள்வதில் சிரமமும் அதனால் இயற்பியலில் வெறுப்பும் வருகிறது. அறிவியல் எவ்வளவு அற்புதமானது அதை விரும்பி படிக்கும் வண்ணம் மேம்படுத்துவது பாடநூலாக இருக்கவேண்டும். பாடநூலில் சிறப்புக்களை கொணரவேண்டும். ஒரே முறைதான் பன்னெடுங்காலமாக பயன்படுத்தப்படுகிறது. தேவைப்படும் இடங்களில் வண்ண எழுத்துக்கள், சிறப்பான தெளிவான படங்கள், வரை ஓவியங்கள் வேண்டும். கொசகொச என்று எழுதி இருப்பதும் ஒரு தெளிவாக எழுத்துக்கள் இல்லாததும் பெரிய குறை. எழுத்துக்களின் வடிவம் பெரிதாக இருக்கவேண்டும். கிராமப்புற மாணவிகள் அந்தியில் குறைந்த வெளிச்சத்தில் படிக்கும் பொது கண்கள் அழுத்தம் பெறுவதை உணர்கிறார்கள். பெரிய எழுத்துக்கள் சிறப்பாக இருக்கவேண்டும். இத்துறையில் இவரால் சிறப்பாக செயல்படும் என்று தனது கட்சியினரில் இவர் பொருத்தமானவராக இருப்பர் என்று பதவியில் அமர்த்தியதாக இவர் கருதி, பதவிக்கு சிறப்பு செய்தால் அது தான் பதவி கொடுத்தவருக்கு இவர் செய்யும் கைம்மாறு ஆக இருக்கும். அதை தவிர்த்து மேலும் மேலும் பாகழ்ச்சியுரை பரப்புரை என்று அரசியல் பேசி கொண்டு இருக்காமல் தான் தலைமை ஏற்றிருக்கும் துறைக்கும் மாணவர்களுக்கும் சிறப்பு செய்யவேண்டும். பெரிதாக யாரும் எதையும் செய்யமாட்டார்கள் என்பது நிதர்சனமாக இருக்கிறது என்பதை உணர்ந்து அதில் இருந்து மாறுபடவேண்டும்.
திமுக வில் நல்ல பண்புகள் நிறைந்த எத்தனையோ கல்வியாளர்கள் இல்லையா ? இப்படிப்பட்ட கொச்சை பேச்சாளரை போய் திரு ஸ்டாலின் அவர்கள் ஏன் தேர்ந்தெடுத்தார் ? கல்விக்கு உண்டான மரியாதையை கெடுத்து விட்டாரே ? பட்டிமன்ற பேச்சாளர் தான் வேண்டு மென்றால், நடுநிலையில் சிறந்த திரு சாலமன் பாப்பையா, திருமதி பாரதி பாஸ்கர், திருமதி பர்வீன் சுல்தானா போன்ற நன்கு படித்த, நல்ல மதிப்பு வாய்ந்த மனிதர்களில் ஒருவரை நியமித்திருக்கலாமே ?
லியோனி அய்யா, பாடபுத்தக அட்டையில் சன்னி லியோன் படத்த போட்டுறாதீங்க.
என்றைக்கு திமுகவில் சேர்ந்தாரோ, அன்றிலிருந்தே அவரது நல் எண்ணங்கள் எல்லாம் நாசமாகிவிட்டன.