Load Image
Advertisement

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான 306 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு: அமைச்சர் தகவல்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 1866 ம் ஆண்டு 330 ஏக்கர் நிலம் இருந்தது. தற்போது, 24 ஏக்கர் மட்டுமே கோயில் நிலங்கள் உள்ளன என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.


Latest Tamil News

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, சுவாமி தரிசனம் செய்த அவருக்கு பட்டாச்சாரியார்கள் பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர்.
Latest Tamil News


அதன் பின், அவர் கூறியதாவது: கடந்த பத்தாண்டில் கேட்பாரற்று, பராமரிக்கப்படாமல் உள்ள தமிழக கோயில்களில் ஆக்கபூர்வமான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. குடமுழுக்கு நடத்தாத கோயில்களின் எண்ணிக்கைகளை கண்டறிந்து, விரைவில் குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள கோசாலையில் பாதுகாப்புடன் சிறப்பாக பராமரிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Latest Tamil News

கோயில் அருகே உள்ள இடத்தை தேர்வு செய்து, அங்கு மேலும் ஒரு கோசாலையை ஏற்படுத்தி பராமரிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய அறிவுறுத்தி உள்ளேன். கடந்த ஆட்சியில், 5 ஆண்டுகள் பணிபுரிந்த கோயில் பணியாளர்களை நிரந்தரமாக்குவோம் என்று,110 விதியின் கீழ் அறிவித்தனர். போகிற போக்கில் அறிவித்துவிட்டு, செயல்படுத்தாமல் விட்டு சென்ற அந்த அறிவிப்பை, திமுக ஆட்சியில் செயல்படுத்தி உள்ளோம்.


Latest Tamil News


ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 1866 ம் ஆண்டு 330 ஏக்கர் நிலம் இருந்தது. தற்போது, 24 ஏக்கர் மட்டுமே கோயில் நிலங்கள் உள்ளன. மற்ற இடத்தில் குடியிருப்புகளும், கடைகளும் கட்டப்பட்டு ஆக்கிரமிப்புகளாக உள்ளது. அதில் இருப்பவர்கள் உரிய மனு அளித்தால், வாடகைதாரர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவர். கோயில் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் நோய்த் தொற்றில் இருந்து விடுபட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும், இயற்கையையும் வேண்டுவோம், மக்களும் வேண்டிக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Latest Tamil News


வாசகர் கருத்து (45)

  • Amal Anandan - chennai,இந்தியா

    ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள் யாரென்று உலகத்துக்கே தெரியும் அதனால்தான் அந்த கோஷ்டி அதிமுகவிற்கு ஆதரவு திமுகவிற்கு எதிர்ப்பு. திமுக வச்சிருச்சு ஆப்பு.

  • Balasubramanyan - Chennai,இந்தியா

    Let him visit the dilapidated temples and see the pathetic condition.

  • Balasubramanyan - Chennai,இந்தியா

    The minister must inform when the encroachment started. Who did . Now who are the beneficiaries. From 1967 it started.Which day the srirangam temple will be demolished by canorsaid by our muthamiz vithagar. This minister was in Aiadmk and was groomed by Jayalalitha. If there are encroachment what the ex minister of HRCE when Our ONRIYA thalamai Amaichar was deputy . Minister. Why no action was taken at that time. How many temples are without fund to lit a single lamp and in dilapidated condition maintained by HRCE. No higher officials and the ministers took any intrest to visit the these temples to know the pathetic condition. The priests in these temples are doing pooja because of their great faith on Almighty. Dont put blame on others. Dont shurk your responsibilty.

  • தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா

    ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான 306 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு அப்போ cross BELT இவவளவு நாள் என்ன பண்ணிக்கொண்டு இருந்தங்கள்

  • Nagarajan D - Coimbatore,இந்தியா

    ஆக்கிரமித்து வைத்திருப்பது யார் திராவிட திருடனுங்க தானே?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement