அரசு ஊழியர் மூளைச்சாவு; உறுப்பு தானம் பெற நடவடிக்கை
சேலம்: ஈரோடு மாவட்டம், சென்னிமலை, பெரியார் நகரை சேர்ந்தவர் பழனிசாமி, 52; காங்கேயம் அரசு போக்குவரத்து பணிமனை தொழில்நுட்ப பணியாளர். கடந்த, 1ம் தேதி மாலை, 5:00 மணிக்கு பெருந்துறையில் இருந்து சென்னிமலைக்கு, இருசக்கர வாகனத்தில் வந்தார். அப்போது எதிரே, நான்கு பேர் வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் பழனிசாமி படுகாயமடைந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூளைச்சாவு அடைந்ததாக, மருத்துவர்கள் கூறினர். கடந்த, 4ம் தேதி இரவு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது குடும்பத்தினர், பழனிசாமி உடலுறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அதற்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நேற்று நள்ளிரவில் உடல் உறுப்புகள் தானமாக பெறுவதற்கான அறுவை சிகிச்சை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!