இந்தியாவுக்கு எதிராக எழுத இந்தியாவிலேயே ஆட்களை தேடும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்

பிரதமராக இரண்டாவது முறை மோடி வெற்றி பெற்றபோது, 'பொய்ப் பிரசாரம், மத வெறுப்பு அரசியல் மூலம் இந்தியாவை மோடி மயக்கிவிட்டார். மோடியின் பெருவாரியான வெற்றியின் மூலம் சுமார் 20 கோடி இஸ்லாமியர்களை, இரண்டாம் தர குடிமக்களாகக் கருதும் இருண்ட அரசியலிடம் இந்தியாவின் ஆன்மா தோற்றுவிட்டது' என, அமெரிக்காவைச் சேர்ந்த ‛தி நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் கடுமையாக விமர்சித்திருந்தது.

அதன்பின், 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த புல்வாமா தாக்குதல் குறித்து அதே ஆண்டு மார்ச் மாதம், 'பாகிஸ்தானுடன் இந்தியா தெருநாய் சண்டையிடுகிறது' என, இந்திய ராணுவம் குறித்து மிகக் கீழ்த்தரமாக விமர்சித்து செய்தி வெளியிட்டது.
இந்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தலைநகர் டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு ஆதரவாக, கடந்த பிப்., 17ம் தேதி முழுப்பக்க விளம்பரத்தை இந்நாளிதழ் வெளியிட்டது.
அதேபோல், கடந்த மே மாதம், இந்தியாவில் கோவிட் தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை, அரசு கூறுவதைக் காட்டிலும் 14 மடங்கு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இப்படி, இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கு எதிராகவும், உண்மைக்குப் புறம்பாகவும் கட்டுரைகளை வெளியிட்டு வரும் ‛தி நியூயார்க் டைம்ஸ்' தற்போது, பிரதமர் மோடிக்கு எதிராக எழுத, இந்தியாவில் தகுதியான நிருபர் தேவை என, விளம்பரம் செய்திருக்கிறது.
'எப்போதும் ஒருதலைபட்சமாக எழுதி வரும் ‛தி நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ், இந்தியாவையும் பிரதமரையும் விமர்சித்து எழுத இந்தியாவில் ஆட்கள் தேவை என, பகிரங்கமாக விளம்பரம் செய்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால், இம்மாதிரி எழுத அமெரிக்காவிலேயே ஆட்களை தயார் செய்யலாம். ஆனால், இந்தியாவில் பிரிவினை வாதத்தை வளர்க்கும் நோக்கில் அரசுக்கு எதிராக எழுத இந்தியாவில் ஆட்களை தேடுகிறது. இதன்மூலம் பத்திரிகை நெறி மற்றும் நடுநிலைத் தன்மைகளை இந்த நாளிதழ் குழிதோண்டி புதைத்து விட்டது' என, பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (183)
அயல்நாட்டு பணத்தில் உள்நாட்டில் குழப்பம் விளைவிக்கும் மிஷனரிகள் ஏற்கனவே பல இங்கே பல துறைகளில் உள்ளூர் பெயர்களில் ஊடுருவி உள்ளனர் அவர்களில் பலரை இவர்கள் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்
எங்கும் போக வேண்டாம், உங்கள் நிருபர் போதுமே...
USER NAME MUST BE SHORTER AND DECENT: COORDINATOR
நாகரிக நாட்டுப் பத்திரிகை செய்த வெட்கங்கெட்ட செயல்... இந்தியா எல்லாத்துறைகளிலும் இன்னும் முனைப்புடன் செயல்பட்டு வளரட்டும்.
நம்ம சீப்பு செந்தில் மிகவும் பொருத்தமானவர். அவருக்கு இது 'கரும்பு தின்ன கூலி' கிடப்பதை போல....