திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தில் வசிக்கும் சரத்குமார் (29), பவானி(27) ஆகிய இருவரும் காதலர்கள். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பவானி பணியாற்றி வந்தார். இதனால், சரத்குமாரும் அங்கேயே சென்று திருமணம் செய்து கொள்ளாமல் தம்பதியாக வாழ்ந்து வந்தனர். அதில், அவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், தனது குழந்தையை காதலன் கடத்தி விற்றுவிட்டதாக வந்தவாசி மகளிர் காவல் நிலையத்தில் பவானி புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று முன்தினம் (ஜூன் 27) குழந்தையை மீட்டனர். மேலும், இதுதொடர்பாக தந்தை சரத்குமார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், சரத்குமாரிடம் நடத்திய விசாரணையில், தாய் பவானியும் சேர்ந்து ரூ.3.60 லட்சத்திற்கு குழந்தையை விற்றது தெரியவந்தது.
இதனையடுத்து, தாய் உட்பட மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்தனர். திருமணம் செய்யாமல் குழந்தையை பெற்றெடுத்த தாய், தந்தையரே குழந்தையை விற்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுல என்ன பரபரப்பு? அந்த தம்பதியினருக்கு வேலை போயிருக்கும். குழந்தையை யாருக்கும் தத்துக் குடுக்க விடாமல் ஆயிரம் முட்டுக்கட்டைகள் போடும் அரசாங்கம். அவிங்களுக்கு நல்க வேலை வாய்ப்பைக் குடுக்க முடியாத அரசுகள். ஏதோ சட்டத்தைப் போட்டு கைது செய்கின்றன.