Load Image
dinamalar telegram
Advertisement

நானும் கிரிக்கெட் வீரன் தான் - முதல்வர் ஸ்டாலின்

Tamil News
ADVERTISEMENT
சென்னை: சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசி போடும் நகழ்ச்சியை துவக்கிவைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளால் நாட்டிற்கு பெருமை. வீரர்கள், தனித்தனியாக இருந்தாலும் போட்டிகளில் பங்கேற்க அணி ஒற்றுமை மிகவும் முக்கியம். வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு உடல் திறனும், மன திடமும் இருக்க வேண்டும்.

விளையாட்டு வீரர்கள் அடுத்த தலைமுறைக்கு ஊக்கம் தரக்கூடியவர்கள். விளையாட்டு துறையை விளையாட்டாக எடுத்து கொண்டால், விளையாட்டாக போய் விடும். விளையாட்டாக போய் விடக்கூடாது என்பதால் தான், விளையாட்டு துறை மேம்படுத்தப்பட்டு வருகிறது.

விளையாட்டு போட்டிகள் குறித்து குழந்தை பருவத்திலேயே ஊக்குவிக்க வேண்டும். நானும் பள்ளி பருவத்தில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். சென்னை மேயர், துணை முதல்வராக இருந்த போது கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். வீரர்களுக்கு என்ன தேவை என்ன என்பது எனக்கு தெரியும். வீரர்களின் தேவை நிறைவேற்றப்படும். உலக அளவில், இந்தியாவிற்கு பெருமை சேர்க்க தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சாதனை படைக்க வேண்டும்.

பதக்கம் வென்றால் பரிசு



ஜப்பானில் ஒலிம்பிக் தமிழகத்தில் 7 பேர் பங்கேற்பதில் மகிழ்ச்சி. தமிழகத்தில், 4 ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் திமுக உறுதி அளித்தது. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். சர்வதேச போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு ரூ.25 லட்சம் வரை செலவு செய்யப்படுகிறது.
Latest Tamil News
ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.3 கோடி, வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.2 கோடி, வெண்கலப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும். உங்கள் நலன் பேணி காக்கப்படும். உங்களுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்

Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (89)

  • சோணகிரி - குன்றியம்,இந்தியா

    மைதானத்தில் ஒரு சிங்கிள் ரன் எடுக்கவே வழியில்லை... பேட்டிங்கே தெரியாது... ஆனால்... சிக்ஸர் சிக்ஸர் என்று அடிமை ஊடகங்கள் கரகோஷம் எழுப்புகின்றன...

  • vbs manian - hyderabad,இந்தியா

    வேறு என்ன என்ன விளையாட்டுகள் தெரியும்.

  • arudra1951 - Madurai,இந்தியா

    நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்

  • Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ

    மிகவும் சரியான தகவல் சுடாலின் ஐயா. நீங்கள் சென்னை மேயராக இருந்தபோது தான் மாட்ச் பிக்சிங் ஊழல் கூட வெளிச்சத்துக்கு வந்தது. இப்போது தெரிகிறது. நீங்களும் கிரிக்கெட் வீரர் தான்.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    ஆமா , நல்லா கூக்ளி போட்டு எல்லாரையும் ஏமாத்துவார்,அதுல கில்லாடி . ஜி,எஸ்,ராஜன் சென்னை

Advertisement