dinamalar telegram
Advertisement

கமலாலயத்தில் விசாகா கமிட்டி விசாரிக்கும் சூழல் வரலாம்: தமிழக பா.ஜ., தலைவர்களை வறுத்தெடுத்த சி.டி.ரவி!

Share
நடந்து முடிந்த சட்டசபை தேர்த லில், பா.ஜ., 20 இடங்களில் போட்டியிட்டும், வெறும் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இது பற்றி பேச, அந்த கட்சியின் தேசிய செயலரும், மேலிட பார்வையாளருமான சி.டி.ரவி தலைமையில், கடந்த, 19ம் தேதி மகாபலிபுரத்தில் ஒரு நட்சத்திர ஓட்டலில் ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில பா.ஜ., மாநில தலைவர், அமைப்பு செயலர், கோர் கமிட்டி உறுப்பினர்கள், தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் செயற்குழு உறுப்பினர்கள்,முன்னாள் தலைவர்கள் என, 25 பேர் பங்கேற்றனர். இது, ஆய்வு கூட்டம் என்பதை விட, சி.டி.ரவியிடம் நாங்கள் திட்டு வாங்குவதற்கு என்றே ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமாக இருந்தது என, அந்த கூட்டத்தில் பங்கேற்ற சிலர் நொந்து கொண்டனர்.

பெண்கள் விவகாரம்அவர்கள் கூறியதாவது: சி.டி.ரவி எப்போதும் இல்லாத அளவுக்கு, கடும் கோபத்தில் இருந்தார். முருகன், கேசவ விநாயகம் என, யாரையும் விட்டு வைக்கவில்லை; எல்லாரையும் வசை பாடினார்.கட்சியின் தோல்வியை விட, பெண் விவகாரங்களால் எழுந்துள்ள புகார்கள் தான், அவருடைய கோபத்துக்கு முக்கிய காரணமாக இருந்தன. இப்படிப்பட்ட புகார்கள் நுாற்றுக்கணக்கில் மேலிடத்துக்கு வந்திருக்கிறதாம். 'இங்கு யாரையும் விசாரிக்க வரவில்லை. அந்த புகார்களின் நம்பக தன்மையை விசாரித்து விட்டு தான் வந்திருக்கிறேன். விசாரணையில் தெரியவந்துள்ள விஷயமெல்லாம், அருவெறுப்பின் உச்ச கட்டம்' என்று சி.டி.ரவி கொந்தளித்தார். ஒரு தலைவர் மீது மட்டும், 134 புகார்கள் வந்துள்ளனவாம். அந்த தலைவர் மீது, அளவுக்கு மீறிய கோபத்தில் இருந்தார். இது போன்ற சம்பவங்களை தடுக்க, 'தமிழக பா.ஜ., தலைவர்கள் யாரும் நட்சத்திர ஓட்டல்களுக்கு செல்லக் கூடாது.


அங்கே ரூம் எடுத்து தங்கக்கூடாது. 'கட்சி ரீதியிலான பணிக்கு சென்று, நட்சத்திர ஓட்டலில் தங்கியதாக தகவல் வந்தால், கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். இதை ஏன் குறிப்பாக சொல்கிறேன் என்றால், நட்சத்திர ஓட்டலுக்கு சென்று, அங்கு பெண்களை வரவழைத்து கும்மாளம் அடிக்கின்றனர். இதை இல்லை என்று மறுத்தால், அதை நிரூபிக்க தயாராக இருக்கிறேன். 'கட்சி பணி தொடர்பாக, பா.ஜ., தலைவர்களும், பெண் நிர்வாகிகளும் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருந்தால், எக்காரணம் கொண்டும், ஒரே விடுதியில் தங்கக் கூடாது. மீறி தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அருகருகே ரூம் எடுத்து தங்கக்கூடாது. அப்படி தங்கி, அதில் ஏதும் புகார் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உத்தரவு போட்டுள்ளார். 'ஊரெல்லாம் விசாகா கமிட்டி அமைத்து, பெண்கள் தொடர்பான பாலியல் புகார் மீது விசாரிக்க வலியுறுத்தி கொண்டிருக்கும் நாமே, நம்மிடையே இருப்போர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, விசாகா கமிட்டி அமைக்க வலியுறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு விடும். 'இப்படியே போனால், கமலாலயத்துக்குள் கட்டாயம் விசாகா கமிட்டி ஒன்று அமைத்தாக வேண்டும் தான்' என்று, சம்பந்தப்பட்ட தலைவர்களையும் அருகில் வைத்துக் கொண்டே, வார்த்தைகளால் வறுத்தெடுத்தார் சி.டி.ரவி.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தில்லுமுல்லுதொடர்ந்து, தேர்தல் தில்லுமுல்லு தொடர்பாக, சி.டி.ரவி பேசியதாக அவர்கள் கூறியதாவது:சட்டசபை தேர்தலுக்கு முன் என்ன சொன்னீர்கள்? 20 தொகுதிகள் நமக்கு குறைவு. 60- முதல், 70 தொகுதிகளில் நாம் வெல்வோம்; கூட்டணியில் அதிக தொகுதிகளை பெற்றுத்தர வேண்டும் என்றீர்கள். அதையெல்லாம் வைத்து தானே, 20 தொகுதிகளை கேட்டு வாங்கினோம். அப்போது கூட, அ.தி.மு.க., தரப்பில் என்ன சொன்னார்கள் தெரியுமா? அ.தி.மு.க., ஓட்டுகள் சரியாக டிரான்ஸ்பர் ஆனால், ஐந்து தொகுதிகளில் பா.ஜ., வெல்லும். தேவையானால், 10 தொகுதிகளை வாங்கிக் கொள்ளுங்கள் என்றனர். அவர்கள் மீது அன்று கோபப்பட்டோம். இன்று என்ன ஆனது? அது தானே நடந்திருக்கிறது?எல்லா பூத் கமிட்டிக்கும், ஆட்களை நியமித்து விட்டோம் என்று சொன்னீர்கள். பல கமிட்டிகளுக்கு ஆட்களே நியமிக்கவில்லை. நியமிக்கப்பட்ட ஆட்களும், எதிர் அணியினரோடு கைகோர்த்து விட்டனர். கேட்டால், இல்லை என்று சொல்வீர்கள். எல்லா விபரங்களும், என் கையில் ஆதாரத்துடன் உள்ளன. வெற்றி பெற்ற நான்கு தொகுதிகளிலும் கூட, பல இடங்களில் பூத் கமிட்டிக்கு நியமிக்கப்பட்ட ஆட்கள் விலை போயிருக்கின்றனர். அப்படி இருந்த போதும், நாம் அங்கே வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால், வெற்றி கிடைத்தது கூட்டணி கட்சியினரால் தான்; நம்மால் அல்ல.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை சேர்ந்தவர்கள் பலர், 20 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருமே, தொகுதியில் தேர்தல் நேரத்தில் நடந்த தில்லுமுல்லு அனைத்தையும், ஆதாரத்தோடு தலைமைக்கு வழங்கி இருக்கின்றனர். அதனால், யாரும் எதையும் இல்லை என்று மறுக்க முடியாது.நான்கு தொகுதிகளின் நிலை இப்படி இருக்கும் போது, வெற்றி பெற்ற தொகுதிகளில் இருக்கும் மாவட்ட தலைவர்களுக்கு, இன்னோவா கார் சிறப்பு பரிசாக வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறீர்கள். அங்கே இருக்கும் மாவட்ட தலைவர்கள் யாரும், சரியாக வேலை செய்யவில்லை என்பது தான், எனக்கு கிடைத்திருக்கும் தகவல்.தேர்தலை சந்திக்க பல கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. அந்த பணமெல்லாம், தேர்தலுக்காக செலவழிக்கப்படவில்லை. கட்சி நிர்வாகிகள் பலரும் தங்களுடையதாக்கி கொண்டு விட்டனர். அது தொடர்பாகவும், முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. அதனால், இப்போதைக்கு யாருக்கும் கார் பரிசு எல்லாம் கொடுக்க வேண்டாம். அப்படியே கிடப்பில் போடுங்கள். விசாரணை முடிவுகள் எல்லாம் வந்த பின், நான் சொன்னதும் கார் கொடுப்பதை எல்லாம் வைத்துக் கொள்ளுங்கள்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

20 தொகுதிகள்தொடர்ந்துஇன்னும் இரண்டு ஆண்டுகளில், லோக்சபா தேர்தலை சந்திக்க இருக்கிறோம். அதற்கு வேகமாக தயாராக வேண்டியிருக்கிறது. தமிழகத்தில், 20 தொகுதிகளில் குறைந்தபட்சம் வெற்றி பெற்றாக வேண்டும். எனவே, உடனே வெற்றிக்கு வாய்ப்புள்ள, 20 தொகுதிகளை கண்டறியுங்கள். அத்துடன், 20 தொகுதிகளுக்கான வெற்றி வேட்பாளர்கள் யார் என்பதையும் கண்டறியுங்கள். இதையெல்லாம், ஒரு மாதத்துக்குள், தலைமைக்கு புள்ளி விபரங்களோடு தெரிவிக்க வேண்டும். அதை வைத்து, பா.ஜ., மேலிடம் நிறைய கணக்குகளை போட்டு, தொகுதிகளை நோக்கி மூன்று மாதங்களில் பிரசாரத்தை துவக்கி விடும். வெற்றிக்காக எந்த உதவியையும் செய்ய, மத்திய பா.ஜ., தயாராக இருக்கிறது. இதில் கவனம் செலுத்தாத நிர்வாகிகள் மீது, மேலிடம் கடும் நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருக்கிறது.ஒருவர் ஒரு பொறுப்பில் நியமிக்கப்பட்டு விட்டார் என்பதாலேயே, அவரை மூன்று ஆண்டுகளுக்கும் பொறுப்பில் வைத்திருக்க வேண்டியதில்லை. சரியாக செயல்படாத யாரையும், உடனடியாக பொறுப்பில் இருந்து எடுத்து விட்டு, வேறொருவரை நியமித்து விடுவோம். இவ்வாறு சி.டி.ரவி பேசியதாக கூறப்படுகிறது.


இப்படி வெளிப்படையாக கண்டித்து எச்சரிக்கை விடுத்த சி.டி.ரவி, சில தலைவர்களிடம் தனித்தனியாக பேசி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இதனால், ஒட்டுமொத்த பா.ஜ., தலைவர்களும் ஆடிப்போய் உள்ளனர். இதற்கிடையில், இந்த கூட்டம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன், கட்சியின் இன்னொரு மேலிட பொறுப்பாளர் சந்தோஷ் ஜி, தமிழக தலைவர்கள் சிலரை டில்லிக்கு வரவழைத்து, இதே மாதிரியான கருத்து களை சொல்லி அனுப்பியுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (94)

 • Prof.Sankaran - Kanchipuram,இந்தியா

  Arrange street meeting in all town nd big villages. Annamalai IPS and Kalyanaraaman ji are enough.

 • Paraman - Madras,யூ.எஸ்.ஏ

  நட்சத்திர ஓட்டல் கும்மாளங்கள் ,பெண்களோடு ஜல்சா எல்லாம் பிஜேபியில் தான் நேர்மையாக கண்டிக்கப்படும். இதுவே தீயமூக்கா, இத்தாலி கான்கிரேஸ் கும்பலாக இருந்தால் கட்சி பதவி கொடுத்து அழகு பார்த்து இருப்பார்கள். ஆமாம் இந்த நட்சித்திர ஓட்டல் கும்மாளங்கள், பெண்களோடு ஜல்சா எல்லாம் செய்யாத ஒரே ஒரு தீயமூக்கா இத்தாலி அடிமைகள் அல்லது திராவிஷ அரசியல்வியாதியை எனக்கு காட்டுங்கள் பாப்போம்?? ஓசி பிரியாணி அடிமைகள் எல்லாம் எதோ அவனுக கட்சியில் ஏசு, புத்தர், காந்தி மட்டுமே இருப்பதாக இங்கு வந்து வெட்கமின்றி கூவுகிறார்கள்

 • Ellamman - Chennai,இந்தியா

  நமீதா, ஜீவஜோதி, காயத்திரி ரகுராம், குஷ்பு எல்லாம் தேச சேவை செய்ய வந்த பின்னர் இப்படி செய்தி வராமல் இருந்தால் தான் பிரச்சனை.

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  ///...கட்சி பணி தொடர்பாக, பா.ஜ., தலைவர்களும், பெண் நிர்வாகிகளும் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருந்தால், எக்காரணம் கொண்டும், ஒரே விடுதியில் தங்கக் கூடாது. மீறி தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அருகருகே ரூம் எடுத்து தங்கக்கூடாது..../// ஹாஹா.. செம காமெடி... இதை மாதிரி நியுஸ்லாம் படிச்சி ரொம்ப நாளாச்சு...மனசே லேசாகிடுச்சு.... இதெல்லாம் அந்த குச்சு, நம்ஸ், காயு, வாந்தி மாதிரி பீசுகளை உள்ளே விட்டதன் பலனா... இல்லை இவனுவ எப்போவும் இப்படித்தானா..???

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  ///...நட்சத்திர ஓட்டலுக்கு சென்று, அங்கு பெண்களை வரவழைத்து கும்மாளம் அடிக்கின்றனர். இதை இல்லை என்று மறுத்தால், அதை நிரூபிக்க தயாராக இருக்கிறேன்...///... இது ஏதோ ப்ரோக்கரோட ஸ்டேட்மென்ட் மாதிரியில்ல இருக்கு..???

Advertisement