dinamalar telegram
Advertisement

ஸ்டாலினை பாராட்டுவதை மட்டுமே நோக்கமாக கொண்ட கவர்னர் உரை: எல்.முருகன்

Share
சென்னை: தமிழக சட்டசபையில் கவர்னரின் உரையானது, முதல்வர் ஸ்டாலினை பாராட்டுவதை மட்டுமே, ஒட்டு மொத்த நோக்கமாக கொண்டுள்ளதாக பா.ஜ., மாநில தலைவர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: புதிய அரசு அமைந்த பிறகு முதன் முறையாக தமிழக கவர்னர் நிகழ்த்திய உரை, பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இவ்வுரையானது தமிழக முதல்வர் ஸ்டாலினை பாராட்டுவதை மட்டுமே, ஒட்டு மொத்த நோக்கமாக கொண்டுள்ளது. சாத்தியமே இல்லை என்பது அப்பட்டமாக தெரிந்திருந்தும், மாணவர்களையும், பெற்றோரையும் ஏமாற்றும் நோக்கில் 'நீட் தேர்வை ரத்து செய்வோம்' என்று திமுக தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி அளித்தது. ஆனால் இப்போது கவர்னர் உரையில் நீட் தேர்வு ரத்து பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இது மிகப்பெரிய ஏமாற்று வேலை.
பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்போம் என்றும், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்போம் என்றும், காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவித்து மக்களை ஏமாற்றினார்கள். ஆனால் கவர்னர் உரையில் இதுபற்றி வாயே திறக்கவில்லை. ஏழைத் தாய்மார்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கவர்னர் உரையில் அதுபற்றி பேச்சு, மூச்சே இல்லை. இது ஏழை தாய்மார்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்காகவே நடத்தப்பட்ட நாடகம் என்பது ஊர்ஜிதமாகி உள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (26)

 • HONDA -

  உன் பின்னால என்ன இருக்குன்னு பாத்துட்டு பேசலாமே முருகா

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  தமிழ்நாடு .....ஸ்டாலினை பாராட்டுவதை மட்டுமே நோக்கமாக கொண்ட கவர்னர் உரை: எல்.முருகன்...இதில் என்ன தப்பு..இந்தியாவின் பொருளாதாரத்தை சிதைத்து விட்டு நாடே திவாலாகும் நிலைக்கு கொண்டு வந்த மோடியை கடவுள் என்று சொல்வதை விடவா மோசம்..மேலும் முதலில் இந்த முருகன், தமிழ் கடவுள் பெயரை வைத்து உள்ளவரின் . செயல் எப்போதும் தமிழ் நாடு குறித்து பெருமை படனும்..அதை விட்டு இப்படி வசை படுவதை ஆதரிக்க முடியாது..ஆங்கிலேயன் வந்தான் ஆங்கிலம் கற்றோம்.. இப்போ வட நாட்டுக்காரன் ஆட்சி செய்கிறான் அதனால் இந்தி கற்கணும்.. அப்போ ஆங்கிலேயர்களுக்கு அடிமை..அதனால் அவன் சொல்படி நடந்தோம்..இப்போ வட இந்தியர்களின் சொல்படி நடக்கவா சுதந்திரம் பெற்றோம்.. பிஜேபி சிந்திக்கணும்..

 • Ravi Chandran - Vienna,ஆஸ்திரியா

  இவரை அப்படியே குண்டு கட்டா தூக்கி டில்லிக்கு பாற்சல் சீக்கிரம் பண்ணுங்க. தொந்தரவு தாங்க முடியவில்லை. டில்லியில் போய் வேல் துக்கட்டும்

 • Venkatesan.v - Chennai,இந்தியா

  முருகன் பாஜகவுக்கு ஒரு சாபக்கேடு. எத்தனையோ நல்ல திறமையான ராகவன், C. P. R., பொன்னார் போன்றவர்களை தமிழக பாஜக தலைவராக நியமிக்க வேண்டும். அல்லது அண்ணாமலையையாவது நியமிக்க வேண்டும்.

 • ஆப்பு -

  அதிமுக அமைச்சர்களின் மேலே குடுத்த ஊழல் பட்டியலைப் பற்றி கெவுனருக்கு ஒண்ணுமே எழுதித் தரலையா?இல்லே, அதைப் படிக்க கெவுனர் மறுத்துட்டாரா?தங்கள் கருத்து என்ன மிஸ்டர் முருகன்?

Advertisement