dinamalar telegram
Advertisement

3.14 லட்சம்: கடலூர் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டவர்கள்கொரோனா தொற்று அதிகரிப்பால் மக்கள் ஆர்வம்

Share
Tamil News
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல்படுத்தி அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.

ஆனாலும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. உயிரிழப்பும் அதிகரிக்கிறது.கடலுார் மாவட்டத்தில் தினசரி ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு, பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக 200 ஆக குறைந்துள்ளது.மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு 56 ஆயிரத்து 539 ஆக உயர்ந்துள்ளது.54 பேர் ஆயிரம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.உயிரிழப்புகளே இல்லாத நாட்கள் இல்லை என்ற நிலையில் நேற்று முன்தினம் வரையில் 719 பேர் இறந்துள்ளனர். தொற்று பாதித்த 1,581 பேர் கடலுார் மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகளிலும், 326 பேர்பிற மாவட்டங்களில் பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் கடலுார் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும், இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்களான போலீசார் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

பின், 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கும், கடந்த 1ம் தேதி முதல் 45 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று வரையில் 1 கோடியே, 29 லட்சத்து 33 ஆயிரத்து 755 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என, 89 மையங்கள் மூலம் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.அது தவிர, சிறப்பு முகாம்கள் மூலமும் தடுப்பூசி போடப்படுகிறது. ஆரம்பத்தில் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் தடுப்பூசி போட்டுக் கொள்ள யாரும் முன்வரவில்லை.ஆனால், தொற்று பாதிப்பு, உயிரிழப்பு என, அச்சம் காரணமாக மக்களிடையே தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்துள்ளது.அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்கள் படையெடுத்து வருகின்றனர்.அவர்கள் அனைவருக்கும் போட முடியாத நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது தடுப்பூசி போடும் பணி மீண்டும் துவங்கியுள்ளது.அதிகரிப்பு கடலுர் மாவட்டத்திற்கு போதுமான அளவில் தடுப்பூசி வருவதால் அதிகளவில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடலுார் மாவட்டத்தில் நேற்று வரையில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 187 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளனர்.நேற்று (21ம் தேதி) ஒரே நாளில் 4,045 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 238 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியும், 54 ஆயிரத்து 949 பேர் கோவாக்சின் தடுப்பூசியும் போட்டுள்ளனர்.

மேலும், 2 லட்சத்து 57 ஆயிரத்து 87 பேர் முதல் டோஸ், 57 ஆயிரத்து 100 பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசிபோட்டுள்ளனர். மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.அதிகபட்சமாக கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் 15 ஆயிரத்து 987 பேருக்கும், என்.எல்.சி., மருத்துவமனையில் 12 ஆயிரத்து 966 பேருக்கும், நடுவீரப்பட்டில் 14 ஆயிரத்து 287 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement