dinamalar telegram
Advertisement

வருமுன் காக்க! பின்னலாடை தொழிலாளருக்கு தடுப்பூசி திட்டம் அதிவேகம்

Share
Tamil News
திருப்பூர்:பின்னலாடை தொழிலாளருக்கான தடுப்பூசி திட்டம், அதிவேகமெடுக்க உள்ளது.அரசு தளர்வு அளித்ததையடுத்து, கடந்த 7ம் தேதி முதல், பின்னலாடை ஏற்றுமதி மற்றும் ஜாப்ஒர்க் நிறுவனங்கள் மீண்டும் இயக்கத்தை துவக்கியுள்ளன. நேற்று முதல், 50 சதவீத தொழிலாளர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், உற்பத்தி, ஆர்டர் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனாவை ஒழித்து, தொழிலாளர் பாதுகாப்பு; தொழில் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, இந்திய தொழில் கூட்டமைப்பும் (சி.ஐ.ஐ.,), 'தினமலர்' நாளிதழும் இணைந்து, தொழிலாளருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, தனியார் மருத்துவமனைகளுடன் சி.ஐ.ஐ., புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுவருகிறது. பின்னலாடை நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கு தொகை செலுத்தி பெற்று, தொழிலாளருக்கு இலவசமாக ஊசி போடப்படுகிறது.
சி.ஐ.ஐ., திருப்பூர் மாவட்ட கவுன்சில் தலைவர் திருக்குமரன் மற்றும் முன்னாள் தலைவர் வெங்கடேஷ் கூறியதாவது:வரும் முன் காக்கும் நடவடிக்கையாக அனைத்து பின்னலாடை தொழிலாளருக்கும் தடுப்பூசி செலுத்துவது அவசியமாகிறது. இதற்காகவே, தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கோவை கே.ஜி., மருத்துவமனையிடம் இருந்து 16 ஆயிரம் தடுப்பூசி பெறப்பட்டுள்ளது. மொத்தம் ஐந்தாயிரம் பேருக்கு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. ஏற்றுமதி நிறுவனங்கள் 50 சதவீத தொழிலாளருடன் இயங்க அனுமதித்துள்ள அரசு, அடுத்த ஒரு மாதத்துக்குள் நுாறு சதவீத தொழிலாளருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசி திட்டத்தை மேலும் வேகப்படுத்த உள்ளோம்.
நாளொன்றுக்கு 500ல் இருந்து, ஆயிரம் ஆக ஊசி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவை ராசி மருத்துவமனை, சென்னை அப்பலோ மருத்துவமனைகளுடன், மொத்தம் 33 ஆயிரம் தடுப்பூசிக்காக, புதிதாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனைகளும், திருப்பூரில் விரைவில் களமிறங்குகின்றன. ஒரு மருத்துவமனை மூலம், தினம் ஆயிரம் பேருக்கு ஊசி போடப்படும். அந்தவகையில், நாளொன்றுக்கு மூவாயிரம் பேருக்கு, ஊசி செலுத்த முடியும்.
சி.ஐ.ஐ., ல் உறுப்பினராக உள்ள நிறுவனங்கள், https://forms.gle/f3fwffaHwZMwfGLx7 என்கிற தளத்தில் தடுப்பூசி தேவை விவரங்களை பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு, 97911 60622 எண்ணில் தொடர்புகொள்ளலாம். கூட்டு முயற்சிகள் மூலம், விரைவில் தொற்று இல்லாத திருப்பூர் என்கிற லட்சியத்தை எட்டிபிடிப்போம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement