dinamalar telegram
Advertisement

ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த திட்டம்

Share
புதுடில்லி : பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., நிறுவனத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தக்கூடும் என தெரிகிறது.

பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனங்களான, பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., ஆகியவை கடும் நஷ்டங்களை சந்தித்ததை அடுத்து, ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப் பட்டது.இதற்காக, கடந்த 2020 -- 2021 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 37 ஆயிரத்து 268 கோடி ரூபாய், விருப்ப ஓய்வு திட்டத்துக்காக ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் 50 சதவீதம் பேரும், எம்.டி.என்.எல்., நிறுவனத்தில் 80 சதவீதம் பேரும் விருப்ப ஓய்வு பெற விரும்புவதாக தெரிவித்தனர். இதையடுத்து, 93 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு திட்டத்துக்கு பொருத்தமானவர்களாக ஏற்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது இந்நிறுவனங்களில் கடுமையான ஆள் பற்றாக்குறை நிலவுகிறது.இதையடுத்து, தொலைதொடர்பு அமைச்சகம், விருப்ப ஓய்வு திட்டத்துக்கு பொருத்தமான ஊழியர்களை, மீண்டும் ஆலோசகர்கள் பெயரில் பணியமர்த்த முடியுமா என, குறிப்பிட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (18)

  • seshadri - chennai,இந்தியா

    இவர்களை வேலைக்கு மீண்டும் எடுப்பதை விட இளம் பொறியாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் அவர்களது வேலை இல்லா திண்டாட்டமும் தீரும் மற்றும் இந்த வயதானவர்கள் திரும்ப வந்தாலும் ஒன்றும் கிழித்து விட போவதில்லை அப்படி இருந்தால் முதலிலேயே செய்திருப்பார்கள் நிறுவனமும் நஷ்ட பட்டு இருக்காது. நான் அந்த அலுவலகத்திற்கு சென்று இருக்கிரென் ஜாலியாக உட்கார்ந்திருப்பார்கள் வேலை ஒன்றும் ஒழுங்காக நடக்காது.

  • sahayadhas - chennai,பஹ்ரைன்

    அபோ அம்பானி அவுட்டா,

  • sahayadhas - chennai,பஹ்ரைன்

    ஆஹா சந்தோசம் ,மறுபடியும் வயதானவர்களுக்கு free incomig மோடி வாழ்க

  • Ramona - london,யுனைடெட் கிங்டம்

    போனவை போனதாகவே இருக்கலாமே, அவங்க பணிகளை நன்றாக செய்து இருந்தா bsnl நஷ்டம் ஏற்படுத்தும் பொதுநிறுவனம் ஆக மாறி இருக்காதே, பணத்தை மட்டுமே குறியாக கொண்டு vvrs பெற்று ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் வேலை கொடுப்பதால் இந்த நிறுவனத்திற்கு லாபம் கிடைக்கும் எனபது வெறும் பகல் கனவு, நல்ல நிறுவனத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கிய பெருமை முந்தய பெயர் போன மா மந்திரிகள் மற்றும் பணியாளர்கள் தான், என்பது உலக உண்மை, இந்த நிறுவனம் இன்னும் பாடம் சரியாக கற்கவில்லை.

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    லைன் மென் போன்றவர்களை மட்டும் பணியில் மீண்டும் அமர்த்தினால் பயனுள்ளவர்களாக இருப்பார்கள், உழைக்காதவர்களை, மற்றும் யாரையுமே மதிக்காதவர்களை மீண்டும் பணியில் அமர்த்தினால் இருக்கும் பயனாளிகளுக்கு சென்றுவிடுவார்கள், வந்தே மாதரம்

Advertisement