Load Image
Advertisement

தீவிரம்: பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் அனுப்பும் பணி...நான்கு கல்வி மாவட்டங்கள் வாரியாக ஏற்பாடு

  தீவிரம்: பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் அனுப்பும் பணி...நான்கு கல்வி மாவட்டங்கள் வாரியாக ஏற்பாடு
ADVERTISEMENT
தமிழகத்தில் கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டது.கடந்த 2020-2021ம் கல்வியாண்டில் விலையில்லா பாட புத்தகங்கள் மாவட்டம் வாரியாக முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டது.


பள்ளிகள் திறக்க தாமதம் ஏற்பட்டதால் மாணவ, மாணவியரை பள்ளிக்கு வரவழைத்து பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.கடந்தாண்டை போன்று இந்தாண்டும் கொரோனா பரவியதால் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா பாதிப்பு குறையத் துவங்கியதால் 2021-2022ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை, மாற்றுச் சான்றிதழ் வழங்கல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஏதுவாக கடந்த 14ம் தேதி முதல் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பள்ளிக்கு வர பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.சேர்க்கை துவக்கம்பள்ளிகளில் அன்றைய தேதி முதல், மாணவர் சேர்க்கை, மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணி தமிழகத்தில் கல்வி மாவட்டங்கள் வாரியாக நடந்து வருகிறது. கடலுார் மாவட்டத்தில் கடலுார், வடலுார், சிதம்பரம், விருத்தாசலம் என நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளது. மாவட்டத்தில் 1,716 மேற்பட்ட அரசு, அரசு உதவிப் பெறும் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை 3 லட்சத்து 19 ஆயிரத்து 474 மாணவ, மாணவியர் உள்ளனர்.


இவர்களுக்கு தேவையான புத்தகங்கள் பாட வாரியாக முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இறக்கி வைக்கப்பட்டு, கடலுார், வடலுார், சிதம்பரம், விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நேற்று முன்தினம் முதல் தீவிரமாக நடந்து வருகிறது.இது குறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ' கல்வி மாவட்டங்கள் வாரியாக புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


அரசு அறிவித்த பிறகே மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள் வழங்கப்படும் தேதி தெரியவரும். மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி முதல் நேற்று வரை 446 அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 4,605 புதிய மாணவ, மாணவியர் சேர்க்கை நடந்துள்ளது' என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement