dinamalar telegram
Advertisement

அரக்கோணம்- - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவை நேற்று துவக்கம்

Share
Tamil News
வாலாஜாபாத்-நாடு முழுதும், இரண்டாவது அலை கொரோனா தொற்று தடுப்பதற்கு, அரசு ஊரடங்கு உத்தரவு கடை பிடித்து வருகிறது. இதில், பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

அரசு ஊழியர்கள், பல்வேறு அலுவலகங்களுக்கு செல்வதற்கு சௌகரியமாக, சில வழித்தடங்களில் மட்டுமே, அரசு பஸ்கள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.அந்த வரிசையில், திருமால்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, காலை, 7:00 மணிக்கு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை கடற்கரை வரையில் ஒரு ரயிலும்.மாலை, 6:00 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக திருமால்பூர் வரையில் மற்றொரு ரயில் என, இரு ரயில்கள் இயக்கப்படுகிறது.


பகலில், எந்த ஒரு ரயில்களும் இயக்குவதில்லை. ஊரடங்கு தளவிற்கு பின், நேற்று முதல், அரக்கோணம் - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் இயங்கப்பட்டது. இந்த ரயில், காலை, மாலை இரு வேளைகளில் மட்டுமே இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • rajan -

    பொது மக்கள் பயணிக்கலாமா என்பதை கூறவில்லையே.

Advertisement