dinamalar telegram
Advertisement

டல்: குறைந்த விலை மது இல்லாததால் விற்பனை...மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் வெறிச்

Share
Tamil News
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 35 நாட்களுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், குறைந்த விலை மதுபாட்டில்கள் 'ஸ்டாக்' இல்லாததால், மது பிரியர்கள் கூட்டமின்றி பெரும்பாலான கடைகள் வெறிச்சோடின.

தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, டாஸ்மாக் கடைகள் கடந்த மே மாதம் 10ம் தேதி மூடப்பட்டன. ஊரடங்கு அமல்படுத்தியும் தொற்றின் தாக்கம் குறையாததால், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, கடந்த மே மாதம் 24ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதில், 27 மாவட்டங்களில் பாதிப்பு குறைந்ததால், டாஸ்மாக் கடைகள் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 104 டாஸ்மாக் கடைகளும் 35 நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டன.முன்னதாக தொற்று தடுப்பு நடவடிக்கையாக, டாஸ்மாக் கடைகளின் முன்புறம் சவுக்கு கழிகள் மூலம் தடுப்பு அமைத்தல், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பிளீச்சிங் பவுடர் தெளித்தல், மதுபிரியர்கள் சமூக இடைவெளிவிட்டு நிற்க கட்டங்கள் வரைதல், மதுவாங்க வருபவர்களுக்கு கிருமிநாசினி அளித்தல் உட்பட பல்வேறு விதிமுறைகளை பின்பற்றுமாறு விற்பனையாளர், மேற்பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.பெரிய டாஸ்மாக் கடைகளுக்கு 2 முதல் 3 போலீசாரும், சிறிய கடைகளுக்கு ஒரு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஆனால், மாவட்டத்தில் பெரும்பாலான கடைகளில் மது பிரியர்களின் கூட்டமின்றி டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடின.விசாரித்ததில், ஊரடங்கையொட்டி, கடந்த மே 8, 9 ஆகிய தேதிகளில் குறைந்த விலை கொண்ட மதுபாட்டில்களை மதுபிரியர்கள் பெட்டி பெட்டியாக வாங்கிச் சென்றதால், அப்போதே விற்று தீர்ந்து விட்டன.இதனால், டாஸ்மாக் கடைகளில் 120 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை உள்ள விலை குறைந்த ரக குவாட்டர்கள், 120 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை உள்ள பீர் வாகைகள் 'ஸ்டாக்' இல்லை.கடை திறப்பையொட்டி நேற்று புதிதாக 'லோடு' வராததால், 220 ரூபாய்க்கும் அதிக விலை கொண்ட மது பாட்டில்கள் மட்டுமே நேற்று விற்பனை செய்யப்பட்டன.விலை அதிகமாக இருப்பதை அறிந்த மது பிரியவர்கள் மது பாட்டில் வாங்க வரவில்லை என தெரியவந்தது.

சின்னசேலம்சின்னசேலம் தாலகாவில் உள்ள 13 டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. கடைகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த, அனைத்து இடங்களிலும் தடுப்புகள் அமைத்து, போலீசார் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.சின்னசேலம் பகுதியில், பெரும்பாலான கடைகளில் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று, மது பாட்டிலை வாங்கிச் சென்றனர். முன்னதாக டாஸ்மாக் கடைகளை சுற்றி பிளீச்சிங் பவுடருடன், கிருமி நாசினியும் தெளிக்கப் பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement