dinamalar telegram
Advertisement

10 ஆண்டாக நீடித்த பாலம் கட்டும் பிரச்னை: அமைச்சர் பேச்சுவார்த்தையால் தீர்வு

Share
Tamil News
செஞ்சி-செஞ்சி அடுத்த கெங்கவரம் கிராமத்தில் 10 ஆண்டுகளாக நீடித்து வந்த பாலம் கட்டும் பிரச்னைக்கு அமைச்சர் பேச்சுவார்த்தையால் தீர்வு காணப்பட்டது.

செஞ்சி அடுத்த கெங்கவரம் கிராம ஏரிக்கு, மொக்கை ஓடை வழியாக தண்ணீர் வருகிறது. மழைக் காலங்களில் ஓடையில் 10 அடி உயரத்திற்கும் அதிகமாக தண்ணீர் செல்லும்.ஓடையை அடுத்து பல நுாறு ஏக்கர் விவசாய நிலங்களும், வீடுகளும் உள்ளன. இப்பகுதி மக்கள் மழைக் காலங்களில் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.இதனால், கடந்த 10 ஆண்டுக்கு முன் 7.5 மீட்டர் நீளமும், 9 மீட்டர் அகலமும் கொண்ட சிறு பாலம் கட்டுவதற்காக பணிகள் நடந்தது. அப்போது ஆட்சேபணை எழுந்ததால், பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டது. மீண்டும் 33.13 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த 10ம் தேதி துவங்கியது.இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த தனி நபர் ஆட்சேபணை தெரிவித்து வழக்கறிஞர் மூலம் பி.டி.ஓ.,விற்கு நோட்டீஸ் அனுப்பினார். இதனால் பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டது. இது குறித்து கிராம மக்கள் கடந்த 12ம் தேதி அமைச்சர் மஸ்தானிடம் முறையிட்டனர்.நேற்று அமைச்சர் கெங்கவரம் கிராமத்திற்கு சென்று பாலம் கட்ட ஆட்சேபணை தெரிவித்த நபரின் வழக்கறிஞர் ராஜாராமனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது, தாசில்தார் பிரபு வெங்கடேஸ்வரன், பி.டி.ஓ.,க்கள் கேசவலு, சுப்ரமணியன், ஏ.பி.டி.ஓ., கண்ணன், ஒன்றிய பொறியாளர்கள் தனசேகர், தண்டபாணி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் விஜயகுமார் உடனிருந்தனர்.பேச்சுவார்த்தையில், பாலம் கட்டுவதால் எந்த நிலத்திற்கும் பாதிப்பு ஏற்படாது என விளக்கி சமரசம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பாலம் கட்டும் பணியைத் தொடர அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.கடந்த 10 ஆண்டுகளாக நீடித்த பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் உற்சாகமடைந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Girija - Chennai,இந்தியா

    சேவூர் இதுதான்யா மக்கள் பணி

Advertisement