dinamalar telegram
Advertisement

ஒப்பந்ததாரர் தலையில் குப்பையை கொட்ட வைத்த சிவசேனா எம்எல்ஏ.,

Share
மும்பை: கழிவுநீர்க் கால்வாய் மற்றும் கழிவுநீர் குழாயை சரியாக சுத்தம் செய்யவில்லை எனக்கூறி, சிவசேனா எம்எல்ஏ ஒருவர், ஒப்பந்ததாரர் தலையில் குப்பையை போட வைத்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தென்மேற்கு பருவமழை காரணமாக மஹாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. அவற்றை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.


மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள சிவசேனா வசம் உள்ள மும்பை மாநகராட்சியின் பல இடங்களிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. மழை நீர் தேங்கிய பகுதிகளை , மும்பை வடக்கு பகுதியில் உள்ள கந்திவலி தொகுதி எம்எல்ஏ.,வான சிவசேனாவை சேர்ந்த திலிப் லண்டே நேரில் ஆய்வு செய்தார்.



அப்போது மழை நீர் தேங்கி மழைநீர்க்கால்வாய் மற்றும் மழைநீர்க்குழாய்களை சரியாக சுத்தம் செய்யவில்லை என குற்றம்சாட்டிய அவர், மாநகராட்சி ஒப்பந்ததாரரை வரவழைத்தார். அவரை, மழைநீர் தேங்கிய சாலையில் அமர வைத்ததுடன், அங்கு தேங்கியிருந்த குப்பைகளை எடுத்து அவரது தலையில் போடும்படி தன்னுடன் வந்தவர்களுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து இரண்டு பேர் சேர்ந்து குப்பைகளை எடுத்து அவரது தலையில் போட்டனர். இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



இது தொடர்பாக லண்டே வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் தங்களது கடமையை சரி யாக செய்யவில்லை. ஆனால், மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து என்னை எம்.எல்.ஏ., ஆக தேர்வு செய்துள்ளனர். எனவே எனது கடமையை செய்ய வேண்டும் என்பதற்காக உள்ளூர் கட்சி நிர்வாகிகளுடன் அங்கு சென்றேன். மழைநீரை அகற்றும் பொறுப்பு ஒப்பந்ததாரருக்கு உண்டு. அவர் செய்யவில்லை. எனவே, நாங்கள் சாலையில் இறங்கி தண்ணீரை அகற்ற வேண்டியதாகிவிட்டது. அவர் கடமையை செய்யாததால், அவரது தலையில் குப்பையை போட வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (21)

  • sridhar - Chennai,இந்தியா

    திமிர் , அதிகார போதை . இவர் தொகுதியில் இருக்கும் குறைகளுக்காக இவரை நடுவீதியில் நிற்கவைத்து ……… அடிக்கணும்.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    தொகுதியின் முகவரியை மறந்த எம் எல் ஏ, எம் பிக்களை எதனால் ‘குளிப்பாட்டலாம்’? ‘நல்ல வேலை, சாலை ஒப்பந்தம் எடுக்கவில்லை எடுத்திருந்தால் கொதிக்கும் தார்க்கலவையைத் தலையில் கொட்டியிருப்பார்களே ‘ ஒப்பந்தக்காரரின் மைண்ட் வாய்ஸ்

  • M Ramachandran - Chennai,இந்தியா

    சிவசேனா ஒரு அடாவடி கட்சி. இது போனற நடவடிக்கை தொடர்ந்தால் மோசமான விளைவுகள் ஏற்படும்.அந்த எம் எல் யே மேல் நீதிமன்றத்தில் உரிமை மீறல் வழக்கு தொடங்க வேண்டும்.

  • மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா

    மிகச் சரியான செயல்.. இதுக்கு சங்கிகள் எதுக்கு கொந்தளிக்கிறாய்ங்கன்னு தெரியலே.. கமிஷன் வங்கிக்கு கம்முன்னு இருந்து பழகிப்போச்சி அவனுங்களுக்கு.

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    இப்படிச் செய்ய எம்.எல்.ஏ. அல்ல முதல்வருக்குக் கூட அதிகாரம் கிடையாது. இதெல்லாம் அதிகாரம் கையில் இருப்பதால் வரும் ஆணவம். ஒப்பந்தத்தில் இப்படி ஒரு ஷரத்து இருக்கிறதா? மனிதம் என்ற ஒரு பண்பு இருக்க வேண்டும், அது யாராக இருந்தாலும்.

Advertisement