பெண்களையும் அர்ச்சகர்களாக்க முயற்சிப்போம்: சேகர்பாபு

அறநிலையத் துறையின் தாரக மந்திரமே வெளிப்படைத்தன்மை தான். கோவில்களில் தமிழில்அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. தமிழில் அர்ச்சனை செய்வதற்கான பயிற்சி, அர்ச்சகர்களுக்கு ஏற்கனவே தரப்பட்டுள்ளது. நிலங்கள் மீட்பு'தமிழில் அர்ச்சனை செய்யப்படும்' என்ற பதாகை, சம்பந்தப் பட்டஅர்ச்சகர்களின் மொபைல் போன் எண்ணுடன், கோவில்களில் வைக்கப்படும்.அனைத்து ஜாதியினரும், 100 நாட்களுக்குப் பின் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டிருப்பர். அவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்கப்படும்.
பெண்கள் விரும்பினால், அவர்களுக்கும் பயிற்சி அளித்து, அர்ச்சகர்களாக்கும் முயற்சியில் ஈடுபடுவோம். வடபழநி வேங்கீஸ்வரர் கோவில் குள ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு சட்டப்படி மீட்கப்படும். புகார்களின் அடிப்படையில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. நடவடிக்கைஆக்கிரமிப்பாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பது குறித்து, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோவில்களில் அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள் தேவை உள்ள இடத்தில், சட்டத்திற்கு உட்பட்டு, உடனடியாக நியமிக்கப்படுவர்.

வாசகர் கருத்து (210)
To Chenar Paris: எந்த மசூதி மற்றும் தேவாலயத்தில் கட்டிய கொத்தனார்களையோ, சித்தாள்களையோ moulvi ஆகவும் Bishop ஆகவும் ஆக்கி இருக்கிறார்கள். ஒரு பெண்ணை pope ஆண்டவர் ஆக்கி இருக்கிறார்களா. ஒரு பெண்ணை இஸ்லாமிய குருவாக கொண்டுள்ளனரா. ஹிந்து என்றால் மட்டும் ஏறி மிதிக்கலாம். ஒரு ஹிந்து கிருத்துவதையோ, இஸ்லாமிய படிப்பையோ நன்றாக தெரிந்து கொண்டிருந்தால் பாதிரியார் ஆகவோ மௌல்வி ஆகவோ நியமிப்பீர்களா? வெளிநாட்டில் இருந்து எங்களுக்கு யோசனை செய்யவேண்டாம். இங்கே பாரிசில் ஒரு பள்ளிவாசலில் தேவாரம், திருவாசகம் சொல்லிப் பாருங்களேன் வீடு பொய்சேரமுடியாது.
சரி, இதே நடைமுறையை கிறித்துவ ஆலயங்களிலும் இஸ்லாமிய மசூதிகளிலும் அமுல் படுத்துவார்களா? அவர்களுக்கு தைரியம் இருக்கிறதா? இந்த திராவிட கட்சிகளின் இலக்கே இந்து கோவில்கள், கலாச்சாரம் அழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கம் தான்.
திஸ் நியூஸ் இஸ் ஸ்பான்சர்ட் பை "ஜெலுசில் மற்றும் பர்னால்".. குடித்தால் குளுகுளு, தடவினால் சுகம்..
ஹீ ஹீ ஹீ நாங்க கொடுத்த தேர்தல் வாக்குறுதி அனைத்தையும் எதுவும் பாக்கி இல்லாமே தீர்த்துட்டோம் எங்க கடமை முடிஞ்சது இதுதான் பாக்கி இதையும் நிறைவேத்திட்டா தமிழனுக்கு ஒரு குறையும் இல்ல ஹீஹீ
முதலில் அவர்களை மசூதிகளில் அனுமதியுங்கள் பிறகு யோசிக்கலாம்.