dinamalar telegram
Advertisement

தடுப்பூசி இலக்கு, தவறாமல் எட்டணும்! அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்கணும்:தொற்று பரவல் பயம் முற்றிலும் ஒழியட்டும்

Share
Tamil News
திருப்பூர்:இந்தாண்டு இறுதிக்குள், திருப்பூர் மாவட்டத்தில், அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கு எட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தடுப்பூசியின் முக்கியத்துவத்தை தேசம் உணர்ந்துகொண்டிருக்கிறது; திருப்பூரில் முன்பு முகாம்களில் 'காற்று' வாங்கியது; தற்போது, நடத்தப்படும் முகாம்களில், நீண்ட வரிசையில், தடுப்பூசி செலுத்துவதற்காக மக்கள் காத்திருக்கின்றனர்.
சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, நம் நாட்டில்,தான் அதிக எண்ணிக்கையில், தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுஇருக்கின்றன.மே இறுதி வரை, 16.8 கோடி பேருக்கு முதல் தவணையும், 4.3 கோடி பேருக்கு இரண்டு தவணைகளும் செலுத்தப்பட்டுள்ளன.இரண்டு தவணையும் செலுத்திக்கொண்டவர்கள் மூன்று சதவீதத்தினர்தான்.
முதல் தவணை செலுத்தியோர், 12 சதவீதத்தினர். மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில், இது சொற்ப சதவீதமே.இந்தாண்டு இறுதிக்குள்...ஏறத்தாழ தேவையான தடுப்பூசிகள், ஆக., துவங்கி, டிச., மாதத்துக்குள் கிடைத்துவிடும். திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில், 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும், இந்தாண்டு இறுதிக்குள் தடுப்பூசி செலுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
திருப்பூர், அன்னிய செலாவணி அள்ளித்தரும் நகரம்; பின்னலாடை தொழிலாளர் உட்பட பல்வேறு தொழில்துறையில் பணியாற்றும் தொழிலாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, தடுப்பூசி செலுத்துவதில், தொழில்துறையினரின் அக்கறையும் அவசியமானது.
பாரபட்சம் வேண்டாமே!தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைப்பதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும்; தடுப்பூசி என்பது, அனைவருக்குமானது என்பதால், பாரபட்சமற்ற ஒதுக்கீடு மூலம், மக்கள்தொகை அடிப்படையில், ஒவ்வொரு பகுதிக்குள் பகிர்ந்தளித்தால், சிக்கல் எழாது.
திருப்பூர் மாவட்டத்தில், நகரம் - ஊராட்சி பகுதிகளில், தடுப்பூசி போடப்பட்டுள்ள விகிதத்தை கணக்கில்கொண்டால், கிராமப்புறத்தில் உள்ளோருக்கு, தடுப்பூசி எட்டாக்கனியாகவே இருக்கிறது. நகரங்களில் மக்கள் அடர்த்தி அதிகம் என்பதால், தடுப்பூசி செலுத்தும் பணி எளிதாக இருக்கிறது என்பதற்காக, தொலைதுாரத்தில் உள்ள கிராமங்களை புறக்கணித்துவிடக்கூடாது.
மாவட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்டோர், 22 லட்சம் பேருக்கு மேல் உள்ளனர். இந்தாண்டு இறுதிக்குள், பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்ற இலக்கை, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும்.18 வயதுக்கு கீழ்உள்ளோருக்கு...மேலும், 18 வயதுக்கு கீழ் உள்ளோர், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்த திட்டமிடல் தற்போதே துவங்க வேண்டும். குறிப்பாக, நம் நாட்டில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட நாட்டின் மக்கள்தொகையில், 34 சதவீதமாக இருக்கிறது.எனவே, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டாலும்கூட, அது பாதிக்கிணற்றை கடந்தது போன்றதுதான்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement